பதிவு செய்த நாள் :
வலை வீச்சு!
கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு ...
தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் தீவிரம்

புதுடில்லி:டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில், தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில், மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் உட்பட, 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்; அவர்கள் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு வலை வீச்சு:தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் தீவிரம்

கடந்த, 2001ல், பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, 2013 பிப்ரவரியில், டில்லி, திஹார் சிறையில் துாக்கிலிடப்பட்டான்.

எச்சரிக்கை:

இந்நிலையில், அப்சல் குரு நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலையில், மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக, 'வீடியோ' வெளியானது.இதைத் தொடர்ந்து, பல்கலையின் மாணவர் சங்கத் தலைவரான, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கன்னையா குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கோஷமிட்டதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி.,யுமான டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட, 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.டில்லி, மேற்கு வங்கம், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில், போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள், வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால், விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

ஐந்து குழு:

இதற்கிடையே, 'நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஆறு மாணவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, துணை வேந்தருக்கு, டில்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது; அவர்கள் குறித்த தகவல்களையும், தரும்படி கேட்டு உள்ளது.தற்போது தலைமறைவாக உள்ள

மாணவர்களைத் தேடுவதற்காக, டில்லி போலீசில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் சதி: பெற்றோர் புகார்:

'ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமுலாதற்கொலைவிவகாரத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் தான், எங்கள் மகன் மீது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கைது செய்யப்பட்ட மாணவர் கன்னையா குமாரின் பெற்றோர் கூறினர்.

பீஹார் மாநிலம், பேகுசராய் மாவட்டத்தில் வசித்து வரும் அவருடைய குடும்பத்தினர், 'கன்னையாவின் கைது அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோரை, நாட்டை மதிக்கக் கூடிய எங்களுடைய மகன், தேசவிரோதமாகக் கோஷமிடுவானா? இது திட்டமிட்ட சதி தான்' என, அவர்கள் கூறினர்.

பொய் குற்றச்சாட்டு: ராஜா விளக்கம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜா கூறியதாவது:என்னுடைய மகள், மாணவர் இயக்கத்தில் இருக்கிறார்; ஆனால், அவர் தேசவிரோத செயலில் ஈடுபடவில்லை. எங்கள் கட்சியின் மாணவர் இயக்கம் குறித்து அறிந்தவர்கள், இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்பதை அறிவர்.பல்கலை சம்பவத்தை, நாங்கள் அரசியலாக்குவதாகக் கூறுகின்றனர்; அதில் உண்மையில்லை. மிகச் சிறந்த பல்கலை என்ற பெயரை, ஜவகர்லால் நேரு பல்கலை இழந்துவிடக் கூடாதே என்ற கவலையில் தான், நாங்கள் அங்கு சென்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.என்ன நடந்தது?

*கடந்த, 2001ல், பார்லிமென்டை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, பயங்கரவாதி அப்சல் குரு, 2013 பிப்., 9ம் தேதி துாக்கிலிடப்பட்டான். அப்சல் குருவின் மூன்றாவதுநினைவு நாளை முன்னிட்டு, கடந்த 9ல், கன்னையா குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலையில் கூடினர்.
*அப்போது, அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், தேசவிரோத கோஷங்களையும் எழுப்பியதாக, வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து,

Advertisement

கன்னையா குமார் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
*கம்யூனிஸ்ட் கட்சியின், அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த கன்னையா, பல்கலையில், எம்.பில்., படித்து வந்தார்; மாணவர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தார்.
*காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர், நேற்று முன்தினம் பல்கலைக்கு வந்து, மாணவர்களுக்கு ஆதரவாக பேசினர்.
*இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
*'இந்த விவகாரத்தால், பல்கலைக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது; பல்கலையை தேசவிரோத அமைப்பாக உருவகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்' என்று ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
*கைது செய்யப்பட்ட கன்னையா குமாரை விடுவிக்க வேண்டும் என்று மாணவர்கள், கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
*இதற்கிடையே, டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தை, சில மர்ம நபர்கள் தாக்கியதாக, புகார் செய்யப்பட்டுள்ளது.

லஷ்கர் அமைப்பு துாண்டுகிறது:

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:ஜவகர்லால் நேரு பல்கலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் ஆதரவு உள்ளது என, தெரியவந்துள்ளது; இது துரதிர்ஷ்டவசமானது.இது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளை, மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saint Father - London,யுனைடெட் கிங்டம்
19-பிப்-201601:47:40 IST Report Abuse

Saint Fatherஇந்த மாதிரி கட்சி தலைவரை எல்லோரையும் கைது செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் எல்லா அரசு ஆபீசிலும் மகாத்மா காந்தி,பிரணாப், மோடி போட்டோ மட்டும் தான் வைக்க வேண்டும். மற்ற போட்டோ எல்லாவற்றையும் எடுக்க வேண்டும். தேசிய கொடியை ஏற்ற வேண்டும். கட்சி கொடியை எடுக்க வேண்டும். கட்சி தலைவர்கள் போட்டோவை எடுக்க வேண்டும். இதை உடனே அமுல் படுத்த வேண்டும்.

Rate this:
Makku - plymouth,யுனைடெட் கிங்டம்
16-பிப்-201602:14:24 IST Report Abuse

Makkuஇப்போது நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்கள் எதிலுமே எதிர் மறை நோக்கம் கொண்டவர்கள். இதில் பெரும்பாலோருக்கு முதன் முதலில் கம்யூனிஸ்ட் கோடி ஏற்றபெற்றேதே ( ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் முன்னதாகவே ) இந்தியாவில் என்று தெரியாமல் லெனினிஸ்ட் என்றும் ஸ்டாலினிஸ்ட் என்றும் மாவொஸ்ட் என்றும் அயல் நாட்டுகாரன் காலை பிடிப்பதிலேயே காலம் தள்ளி கொண்டிருக்கிறார்கள்.முதலில் கொடியேற்றிய தமிழன் சிங்கரவேலனை மறந்து விட்டார்கள். எந்தவொரு அரசியல் இயக்கமும் அந்த நாட்டின் கலாச்சாரத்திர்க்கும் மக்கள் மனநிலைக்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே நன்மை பயக்கும்.

Rate this:
R. Ramanujan - Bangalore,இந்தியா
15-பிப்-201618:55:04 IST Report Abuse

R. RamanujanVery very disturbing news A Mastermind of Terrorists who attacked the Indian Parliament was being felicitated on his memorial day and a Parliamentarians like Yechuri and Raja are supportive to this event. India should ban all affiliations of Political parties with Students' Union throughout India. We copy so many things from Western World and why should not we make this ban of Students' Union as a Law. Students must enter the University only for Studies and not to indulge in anyother controversies which affect their and fellow Students studies. If the allegations are proved within the Institutional enquiries, handover such students to the Law Authority for further action. This is the bloody new Mess being d by ISI-China with the support of Terrorists.

Rate this:
மேலும் 87 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X