பதிவு செய்த நாள் :
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக
தமிழர் சீனிவாசனுக்கு வாய்ப்பு

வாஷிங்டன்:அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில் அமர, தமிழகத்தை பூர்வீகமாக உடைய சீனிவாசன், 48, தேர்வு செய்யப்படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  தமிழர் சீனிவாசனுக்கு வாய்ப்பு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், நீண்ட காலமாக நீதிபதியாக பணியாற்றி வந்த அன்டோனின் ஸ்கோலியா, 79, என்பவர், மரணமடைந்தார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, புதிய நீதிபதி ஒருவரை நியமிக்க, அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தி வருகிறார். அமெரிக்காவில், 'கோர்ட் ஆப் அப்பீல்ஸ்' எனப்படும் இரண்டாவது பெரிய கோர்ட்டுகளில் இருந்து தான், சுப்ரீம் கோர்ட்டிற்கான நீதிபதிகள்

தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்திய வம்சாவளி தமிழரான சீனிவாசன் என்பவர், கொலம்பியாவில் உள்ள, கோர்ட் ஆப் அப்பீல்சில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்திற்காகபரிசீலிக்கப்படுவோரில், சீனிவாசன் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சுப்ரீம் கோர்ட் நீதிபதி காலியிடத்திற்கு, முற்போக்கு சிந்தனையும், பன்முக தன்மையும் உடைய நபரை தேர்வு செய்ய, ஒபாமா விரும்புகிறார். அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சீனிவாசன் இருப்பதால், அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக' அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சீனிவாசன் நியமிக்கப்பட்டால், அந்த பதவியில்அமரும் முதல் இந்தியர் என்ற பெருமையை, அவர் பெறுவார்.

திருநெல்வேலியை சேர்ந்தவர்:

சீனிவாசனின் பூர்வீகம், திருநெல்வேலி அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரம். சீனிவாசனின் தந்தையான பத்மநாபன் ஸ்ரீகாந்த், மேல திருவேங்கடநாதபுரத்தில் பிறந்து வளர்ந்தவர்.

Advertisement

பின், வேலைக்காக சண்டிகர் சென்றார்; அங்கு, சீனிவாசன் பிறந்துள்ளார். பின், 1960ல், கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை பேராசிரியர் பணி கிடைத்ததையடுத்து, பத்மநாபன் ஸ்ரீகாந்த், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், அமெரிக்காவில் குடியேறினார். சீனிவாசனின் தாய் சரோஜா, அதே பல்கலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். சீனிவாசன், ஸ்டான்போர்டு பல்கலையில், சட்டம் படித்தவர்.

Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayasri - Coimbatore,இந்தியா
19-பிப்-201611:18:09 IST Report Abuse

Jayasricongrats...

Rate this:
sankar - trichy,இந்தியா
15-பிப்-201618:23:15 IST Report Abuse

sankarவாழ்த்துக்கள் சீனிவாசன்

Rate this:
pradheep rk - Chennai,இந்தியா
15-பிப்-201618:04:39 IST Report Abuse

pradheep rkஅவா அவா அவவ்வா அவா அவா .....

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X