விழி வில்... ஒளி அம்பு...- சரவணன் அபிமன்யூ| Dinamalar

விழி வில்... ஒளி அம்பு...- சரவணன் அபிமன்யூ

Added : பிப் 15, 2016 | |
நாம் கண்களால் காணும் காட்சிகளை எல்லாம் தன் கேமராவால் ஆட்சி செய்யும் முத்திரை பதித்த ஒளிப்பட வித்தகர். விழி என்ற வில்லின் வழியே ஒளி என்ற அம்பை திரையில் தொடுக்கும் மக்களின் அபிமானம் பெற்ற ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூ தன் ஒளிப்பட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய மென்மையான நிமிடங்கள்...* உங்களைப் பற்றி...சொந்த ஊர் மதுரை அருகே கள்ளிக்குடி குராயூர். என் தாத்தா
விழி வில்... ஒளி அம்பு...- சரவணன் அபிமன்யூ

நாம் கண்களால் காணும் காட்சிகளை எல்லாம் தன் கேமராவால் ஆட்சி செய்யும் முத்திரை பதித்த ஒளிப்பட வித்தகர். விழி என்ற வில்லின் வழியே ஒளி என்ற அம்பை திரையில் தொடுக்கும் மக்களின் அபிமானம் பெற்ற ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூ தன் ஒளிப்பட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய மென்மையான நிமிடங்கள்...* உங்களைப் பற்றி...சொந்த ஊர் மதுரை அருகே கள்ளிக்குடி குராயூர். என் தாத்தா துார்தர்ஷன் தொலைக்காட்சியில் கேமரா மேனாக பணியாற்றியவர். அவரை பார்த்து புகைப்படக் கலையை கற்றுக் கொண்டேன். பின், சென்னையில் டி.எப்.டி., படித்து ஒளிப்படக் கலைஞராக வளர்ந்தேன்.* உங்கள் சினிமா குரு?ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் திருவிடம் உதவியாளராக பணியாற்றிய போது ஒளிப்பட நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.* ஒளிப்பதிவு பார்முலா...நடிகர்கள் முகம், அவர்கள் பேசும் வசனங்களை நாங்கள் தெரிந்து கொண்டு தான் ஒளிப்பதிவு செய்வோம். அதே போல் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப லைட்டிங் மாற்றி அமைக்க வேண்டும்.* முதல் படம்...இயக்குனர் சசி இயக்கத்தில், பரத் நடித்த 'ஐந்து ஐந்து ஐந்து' படம் தான் என் முதல் சினிமா என்ட்ரி. இந்தப் படத்தை பார்த்து தான் இயக்குனர் ரவி அரசு, ஆதர்வா நடித்த 'ஈட்டி' படத்திற்கு என்னை ஒளிப்பதிவாளராக்கினார்.* ஒளிப்பதிவில் சவாலான காட்சிகள்...ஆக்ஷன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது தான் மிகப்பெரிய சவால். 'ஹை ஸ்பீடு' கேமராக்களை பயன்படுத்த வேண்டும். ஒரே ஷாட்டில் பல கோணங்களில் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.* சினிமா சிந்தனை...எனக்கு எப்போதும் சினிமா சிந்தனை தான்... ஒரு ஓட்டலுக்கு சென்றால் கூட அங்கு லைட்டிங் எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். அதை அப்படியே என் ஒளிப்பதிவில் பயன்படுத்துவேன்.* நீங்கள் விரும்பும் இயக்குனர்...இயக்குனர் பிரியதர்ஷன் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.* பிரபலங்களின் பாராட்டு...என் குரு மற்றும் 'வேதாளம்' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, 'ஈட்டி' படம் பார்த்து பாராட்டினர்.* சினிமாவிற்கு வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு...முதலில் சினிமா மொழியை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அது தெரியாமல் சினிமாவிற்கு வந்தால் பெரியளவில் சாதிக்க முடியாது.* ஒரு ஒளிப்பதிவாளராக நீங்கள்...சினிமா, என்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. சினிமா போஸ்டர்களில் ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யூ என்று அச்சிடப்பட்டிருப்பதை படிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.asaravana555@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X