சினிமாவில் நடப்பது; நிஜத்தில் நடக்காது-பாபி சிம்ஹா| Dinamalar

சினிமாவில் நடப்பது; நிஜத்தில் நடக்காது-பாபி சிம்ஹா

Added : பிப் 15, 2016 | கருத்துகள் (2)
சினிமாவில் நடப்பது; நிஜத்தில் நடக்காது-பாபி சிம்ஹா

முயற்சி இருந்தால், எதுவும் முடியும். எங்கோ ஒரு மூலையில் துணை நடிகராய் இருந்து, இன்று ஹீரோவாய் தனி ஒருவராய் மாறியிருக்கும் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாக வாழ்ந்து தேசிய விருதை தட்டிச்சென்றவர். தற்போது 'படுபிசி'. கோ 2, கவலை வேண்டாம், இறைவி, வல்லவனுக்கு வல்லவன், பாம்புசட்டை,மெட்ரோ என ஒரு டஜன் படங்களில், பகலும் இரவுமாய் பரபரத்துக் கொண்டிருக்கிறார். மூச்சு விட நேரமில்லாத போதும், தன் மூச்சான ரசிகர்களுக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி மனம் திறக்கிறார் சிம்ஹா...* படிப்புல நீங்க கிங்காமே...?என்ன கலாய்க்கிறீங்களா... பத்தாம் வகுப்பை மட்டும் 3 முறை படிச்சிருக்கேன். பள்ளியிலிருந்து கல்லுாரியை எப்படி கடந்து வந்திருப்பேன்னு பார்த்துக்கோங்க. சேட்டைக்காரன்னா அது நான் தான். தேசிய விருது விழாவில் யாருக்கும் தெரியாமல், உன்னிகிருஷ்ணன் மகள் உத்ராவோடு பென்சிலை வைத்து விளையாடி கொண்டிருந்தேன்னா... நீங்களே பார்த்துக்கோங்க!* ஜிகர்தண்டா படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்?என்னோட கேரக்டருக்கு முதலில் கார்த்திக் சுப்புராஜ் அணுகியது விஜய் சேதுபதியை தான். சித்தார்த் நடிச்ச கதாபாத்திரத்திற்கு தான் என்னிடம் பேசினார். விஜய்சேதுபதி பிசியாக இருந்ததால், நானே அந்த கதாபாத்திரத்தை செய்வதாக கேட்டு நடித்தேன். பண்ணிடுவியா? அது வெயிட்டான கேரக்டர் உன்னால முடியுமா? என கார்த்திக் யோசிச்ச நேரத்தில், நேரம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் தான் முழு உதவி செய்து, என்னை நடிக்க வச்சார்.* மீண்டும் கார்த்திக் சுப்புராஜூடன் கூட்டணி?இறைவி படம் எனக்கு மட்டுமல்ல, கார்த்திக்கிற்கும் வேறு மாதிரி அமையும். விஜய் சேதுபதி,எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் அதில் நடித்திருக்கிறார்கள். என் கணக்கு சரி என்றால், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும்.* உங்கள் படங்களுக்கு எங்கிருந்து கமென்ட் வருகிறது?விஜய் சேதுபதி என் படங்களை பார்த்து விட்டு, சில குறைகளை சுட்டிக்காட்டுவார். நானும் அதை சரிசெய்து கொள்வேன். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் சுபாவம் கொண்டவர் அவர். நடிப்பில் அவரிடம் நெருங்கவே முடியாது.* 'பெங்களுர் நாட்கள்' எப்படி கடந்தது?சூட்டிங் ஸ்பாட்டில் நான், ஆர்யா, ராணா மூன்று பேரும் சேர்ந்து, ஸ்ரீதிவ்யாவை வம்புக்கு இழுக்கவே நேரம் பத்தாது. எப்போ பார்த்தாலும் செட் கலகலன்னு இருக்கும். ஸ்ரீதிவ்யா குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடிச்சுட்டு இருக்காங்க. 20 ஆண்டு அனுபவம் என்பதால், பொண்ணு பிச்சு உதறும்.* நீங்கள் தயாரிப்பாளரா மாறிட்டதா ஒரு கிசுகிசு வந்துச்சே...?வல்லவனுக்கு வல்லவன் கதை கேட்டதும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. சரியான தயாரிப்பாளர் இல்லாததால படம் தள்ளி போயிட்டே இருந்துச்சு. என்னோட நண்பர் சதீஷ், தன்னோட நிலத்தை வித்து அந்த படத்தை எடுக்கிறேன்னு சொன்னாரு. அது தான், நான் தயாரிப்பாளர் அப்படிங்கிற மாதிரி வெளிய வந்துருச்சு. இப்போ வேற நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறாங்க. என் நண்பரும் ஒரு தயாரிப்பாளரா அந்த படத்தில் பணியாற்றுகிறார்.* இத்தனை பிஸியிலும் காதலில் விழுந்தது எப்படி?படத்துல சொல்ற மாதிரி பாடலோ, பல்பு எறியுறதோ அதெல்லாம் இல்லங்க... உண்மையா சொல்லணும்னா அது ஒரு உணர்வு. ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி அவ்வளவு தான். நம்மை நம்பி வர்ற பொண்ண நல்லா வைச்சுக்கனும்கற ஒரு பயம். என்னோட காதல் அப்படி தான்.* காதலிப்பவர்களுக்கும் ஹம்மிங் வருமாமே....காதல்தீபம் ஒன்று, வெள்ளை புறா ஒன்று, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி... இந்த பாடல்கள் தான் அதிகம் முணுமுணுப்பேன். எல்லாமே சூப்பர் ஸ்டாரோட பாட்டுங்கிறது வேற விஷயம்.* உங்களுக்குன்னு ரோல் மாடல் இருக்காங்களா?எனக்கு எப்பவுமே ரஜினி சார் தான். அவரோட நடிப்பு மட்டும் இல்ல, பேச்சு, எளிமை எல்லாமே டாப் தான். ரஜினி மேடையில் நிக்குறார்ன்னா, அவர் பக்கத்துல ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் நம் கவனத்தை ஈர்ப்பது ரஜினி சாரா தான் இருக்கும். சினிமா துறையை தவிர்த்து அப்துல்கலாம் பிடிக்கும், என பேட்டியை முடித்து, சூட்டிங்கில் மும்முரமானார்jay.support@gmail.com ல் நீங்களும் கலாய்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X