விண்ணை தாண்டி வந்து இளசுகளின் இதயத்தை தீண்டிச் செல்லும் மின்னல் கீற்று, என்றென்றும் புன்னகை பூக்கும் பூக்களோடு பேசும் பூங்காற்று, பூலோகம் சிலிர்த்திட ஜில்லிடும் பாதங்களால் நடந்திடும் நீரூற்று, ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பால் திரையுலக அரண்மனையை புதுசாய், ஒரு தினுசாய் அலங்கரிக்கிறார் நடிகை திரிஷா... தனுஷின் 'கொடி' படத்தில் தன் நடிப்பு கொடியை பறக்கவிட்டு கொண்டிருந்த நேரம், 'தினமலர்' வாசகர்களுக்காக பேசிய நிமிடங்கள்...* அரண்மனை 2?இது, சுந்தர்.சி இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம். அதனால ரொம்ப ஸ்பெஷலான 'டெரர்' அனுபவம் கிடைச்சது.* படபடப்பான பேய்ப்பட படப்பிடிப்பு...படப்பிடிப்பு நடந்த மாதிரியே தெரியல. நான், ஹன்சிகா, சித்தார்த், பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா, சுந்தர்.சி எல்லாரும் சேர்ந்து ஒரு குரூப்பா பிக்னிக் போன மாதிரி தான் இருந்துச்சு.* சூட்டிங்கில் அரட்டை...அது எப்படி இல்லாம இருக்கும்... திடீர்ன்னு ஸ்பாட்டுக்கு குஷ்பு வந்து இன்ப அதிர்ச்சிகொடுப்பாங்க. அப்புறம் எல்லோரும் சேர்ந்து அரட்டை கச்சேரி நடத்திட்டு இருப்போம்.* உங்களுக்கு பேய் பயம் இருக்காயாரு எனக்கா... பேயா... ச்சே...ச்சே... அந்த பயமெல்லம் இல்லவே, இல்லை. பேய் படத்தையே நான் நைட்ல தான் போய் பார்ப்பேன். அந்த அளவுக்கு தைரியமான பொண்ணு நான்.* இரண்டு ஹீரோயின்கள் படம்...என்ன பண்றது… இப்போ அது தான் பேஷன்னு நினைக்கிறேன். எல்லாரும் அதை தான் ரசிக்கிறாங்க. கதையில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குதான்னு பார்த்து தான் நடிக்கிறேன். எல்லாரும் என்னோட தோழிகள் தான், யாரு கூட நடிக்கிறதுலயும் பிரச்னை இல்லை.* கமல்ஹாசனுக்கு ஜோடியாக துாங்காவனம்?போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தது நல்ல அனுபவம். கமல்ஹாசனும், ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரும் எனக்கு சண்டைப் பயிற்சி கொடுத்தாங்க. * சண்டையில் காயம்...என் கண்கள் எப்படியிருக்க வேண்டும், என் உடல் எப்படி இருக்க வேண்டும், எப்படி சத்தம் போட வேண்டும் என பிளான் செய்து நடிக்க வைச்சாங்க. அதனால்தான், சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது சிறு காயம் கூட இல்லாமல் நடிக்க முடிந்தது.* அடுத்த படம்...இப்போ… தனுஷ் நடிக்கும் 'கொடி' படம் பரபரப்பா ரெடியாகிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கில் தயாராகும் ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள 'நாயகி' என்ற படத்தில் நடிக்க போகிறேன்.* என்ன கேரக்டரில் நடிக்க ஆசை?வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. 'படையப்பா' நீலாம்பரி கேரக்டர் மாதிரி ஒரு ரோல் பண்ணனும். நானும் எவ்வளவு நாள் தான் நல்லவளாகவே நடிக்கிறது…* வில்லியாக நடிக்க பிடிக்குமோ?ஆமா, என்ன தான் ஹீரோயினா நடிச்சாலும் சும்மா கில்லி மாதிரி ஒரு வில்லியாக நடிக்கிறதுல இருக்குற திரில்லே தனிதான். என்று நம்மிடம் கூறி தனுஷ் உடன் டூயட் பாட கிளம்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE