மோசமான கரை பராமரிப்பு, ஆக்கிரமிப்பு தான் பாதிப்பிற்கு காரணம்| Dinamalar

மோசமான கரை பராமரிப்பு, ஆக்கிரமிப்பு தான் பாதிப்பிற்கு காரணம்

Updated : பிப் 17, 2016 | Added : பிப் 16, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சமீபத்திய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில், வடசென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், திருவொற்றியூர் மேற்கு பகுதி குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் மேற்கு மற்றும் தண்டையார்பேட்டை வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து பொங்கி, வெளியேறிய வெள்ளத்தால் மூன்று நாட்களுக்கும் மேல் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த, 2015, டிச., 1ம் தேதி, மழை வெள்ளத்தால் பல்வேறு நீர்த் தேக்கங்களில் இருந்து அளவுக்கு அதிகமாக உபரி நீர் திறக்கப்பட்டது. அதில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து, 40 ஆயிரம் கன அடிக்கு மேல் பாய்ந்த வெள்ளம், பல்வேறு கிராமங்களை பதம் பார்த்த படி சென்றது. துவக்கத்தில் இருந்து, புழல் உபரிநீர் வேறு பாதையிலும், பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வரும் உபரி நீர், பல்வேறு கிளைகளாக பிரிந்து பின்னர் சடையங்குப்பம் பகுதியில் ஒன்று சேர்ந்து வேறு பாதையிலும் வந்தன.ஆக்கோரஷத்துடன் வந்த இரு நீர்த்தேக்கங்களின் நீரும், எர்ணாவூர் புதிய அனல் மின் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்சாலையின் பின்புறம் பக்கிங்ஹாம் கால்வாய் அருகே ஒன்றாக சங்கமித்தன. இந்த வெள்ளமானது கடலை நோக்கி பாய வேண்டும். தடுத்த ரயில் தடம்மாறாக, பக்கிங்ஹாம் கால்வாயின் கரைகளை உடைத்துக் கொண்டு, கால்வாயின் ௬ அடி உயர தடுப்புச் சுவரையும் தண்டி, திருவொற்றியூர் ரயில் தடத்தை நோக்கி பாய்ந்தது. உயரமான பகுதியாக இருப்பதால், ரயில் வழித்தடத்தை தொட முடியாமல், வெள்ளம் அப்படியே தேங்கி குளமானது. இதனால் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர், அண்ணாமலை நகர், அண்ணா நகர், ராமசாமி நகர், கிருபை நகர், பாலகிருஷ்ணா நகர், கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், டி.கே.எஸ்., நகர், மதுரா நகர், பொன்னியம்மன் நகர், கலைஞர் நகர், சிவசக்தி நகர், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் விஸ்தரிப்பு என, 30க்கும் மேற்பட்ட நகர்கள் மூழ்கின. அணையாக மாறிய ரயில் தடத்தால், வெள்ளம் மறுபுறம் பாயாமல், அப்படியே மூன்று நாட்களுக்கு தேங்கி நிற்கிறது. உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்ட பிறகே, மூன்று நாட்களுக்கு பின், வெள்ளம் மெல்ல பக்கிங்ஹாம் கால்வாயை நோக்கிச் சென்றது. அதன் பின்பு தான் பகுதிவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.எங்கு தவறு நடந்தது ? புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து வந்த வெள்ளம், எர்ணாவூர் அனல் மின் நிலையத்தின் பின்புறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கும் இடத்திலும், புழல் உபரி நீர் வரும் வழியில் சடையங்குப்பம் புதிய பாலம் கட்டும் பணிகள் நடக்கும் இடத்திலும், மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. அதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அதேபோன்று, எண்ணுார் நேரு நகரின் பின்புறம் உள்ள, பக்கிங்ஹாம் கால்வாயின் கரையும், ௨௦௦ மீ., நீளத்திற்கு உடைந்தது. இந்த நிலையில், எர்ணாவூர் பின்புறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய்க்கும், புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து வெளிவரும் உபரி நீர் செல்லும் பாதைக்கும் நடுவில், பத்து கண் மதகு ஒன்று உள்ளது. எப்போதும் திறந்திருக்கும் இந்த பத்து கண் மதகு வெள்ளக்காலத்திலும் திறந்து இருந்தது. அப்போது மூடப்பட்டிருந்தால், வெள்ள சீரழிவு மேலும் அதிகரித்து இருக்கும். கரைகள் முறையாக பராமரிக்கப்படாததால், இரு இடங்களில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.


என்ன தான் தீர்வு? முதலில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும், உபரி நீர் செல்லும் கால்வாய்க்கும் இடையே உள்ள மண் கரைகளில் கருங்கல் பதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே கருங்கல் பதிக்கப்பட்ட கரைப் பகுதிகள், வெள்ளத்தில் தாக்குப்பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ள காலங்களில், பத்து கண் மதகினை, மூடவும் திறக்கவும் ஏதுவாக, மதகு இருக்கும் பகுதிக்கு ஆட்கள் செல்வதற்கு தோதாக, பாதைகள் சீரமைக்கப்பட வேண்டும். இனி வரும் வெள்ளக் காலங்களில் வெள்ள அளவை பொறுத்து, பத்து கண் மதகு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். வெள்ளம் வடிந்து செல்ல வேண்டிய நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு :குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும். கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர், ராஜாஜி நகர் ஆகிய பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள் தான், ஒரு காலத்தில் வடிகால் பகுதியாக இருந்துள்ளன. அவற்றில், கார்கில் நகர் பகுதியில் இரண்டு மதகுகளும் உள்ளன. இந்த 30 நகர்களின் மழை நீரும் இப்பகுதியில் வடிந்து, மதகுகள் மூலம் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று விடும்படி, நில அமைப்பு உள்ளது.இந்த மதகு இருக்கும் பகுதியை சுற்றி, 5 முதல் 10 கிரவுண்டு அளவிற்கு மட்டும் தான் இன்னும் நிலம் உள்ளது. மற்ற வடிகால் பகுதிகள் அனைத்துமே குடியிருப்புகளாக மாறி விட்டன. 80 சதவீத நீர்நிலை புறம்போக்கு பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்கள் காலியாக இருந்திருந்தால், வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கும். ஆக்கிரமிப்புகளை அகற்ற, பலமுறை நோட்டீஸ் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மிச்சமிருக்கும் நிலத்தையும், உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் 'வளைத்து' விட்டார். சுதாரித்த அதிகாரிகள் உடனடியாக அந்த நிலத்தை மீட்டனர். அந்த இடமும் பறிபோயிருந்தால், திருவொற்றியூர் மேற்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கி, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும். - நமது நிருபர் குழு -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X