தமிழக இடைக்கால பட்ஜெட் ; ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தார் ; எதிர்கட்சி வெளிநடப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ; ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தார் ; எதிர்கட்சி வெளிநடப்பு

Updated : பிப் 16, 2016 | Added : பிப் 16, 2016 | கருத்துகள் (74)
Advertisement
தாக்கல் செய்தார் ; எதிர்கட்சி வெளிநடப்பு

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டம் இன்று (16 ம் தேதி ) காலை 11 மணிக்கு துவங்கியது . 2016 -17 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டுக்குஎதிர்ப்பு தெரிவித்து திமுக , தேமுதிக., காங்கிரஸ் இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தன.
அவை துவங்கியதும், நிதி அமைச்சர் தனது பேச்சில் முதல்வர் ஜெ., வை வெகுவாக பாராட்டினார். அவரது பாராட்டுரையில் கூறியதாவது: நீங்கள் இதயமுள்ள இறைவனாக புவியில் பூத்தவர் , மக்கள் நலனை மனதில் நிறுத்தி எழுச்சி கொண்டவர், மாநிலம் மகிழும் வண்ணம் மகிழ்ச்சி தந்தவர், தேவை என்று கேட்கும் முன்னே உதவி செய்பவர் , துன்பங்களை அழிக்கும் ஆற்றல் கண்டவர் , இல்லை என்றே சொல்லே இல்லாதவர், சரித்திரத்தை மாற்றும் சக்தி கொண்டவர்,
உலகிற்கு வழி காட்டும் அறிவை பெற்றவர், நாடு போற்ற அம்மா என்ற பெயரை பெற்றவர், என்ன தவம் செய்தோம் உங்களை வணங்கிடவே, எப்போதும் விழித்திருப்போம். நீங்கள் சொல்வதை செயல்படுத்த, ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதில் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60, 610 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகம் நாட்டிலேயே பொருளதார வளர்ச்சியில் 2 வது இடம் ( 8 .01 சதவீதம் ) பெற்றுள்ளதாகவும், மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டது தமிழக அரசின் சாதனை என்றும், தற்போது தமிழக அரசு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார் .
காவிரி பிரச்னை தீர்த்து வைத்தது, முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தியது, இலங்கை மீனவர்கள் மீட்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் சிறந்து விளங்குகிறது . சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திறமையான ஒருங்கிணைப்பால் மீட்பு பணிகள் நடந்து குறுகிய காலத்தில் இயல்பு வாழ்வு திரும்ப வழி செய்தது தமிழக அரசு என்றும் கூறினார்.
எதிர்கட்சியினர் வெளிநடப்பு: அவை துவங்கியதும், எதிர்கட்சியினர் திமுக, தே.மு.தி.க., காங்கிரஸ் இடதுசாரி மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


தே .மு. தி. க., எம் எல் ஏக்களுக்கு அனுமதி: அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக சபாநாயகரால் ஏற்கனவே தே .மு. தி. க., எம் எல் ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது . சுப்ரீம் கோர்ட் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது . கோர்ட் அனுமதியின்படி தே .மு. தி. க., எம் எல் ஏக்களுக்கு தமிழக சட்டசபையில் அனுமதி அளிக்கப்பட்டது. எம்எல்ஏ,க்கள் 6 பேர் இன்று சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்றனர். இதற்கிடையில், தமிழக அரசு தரப்பில் இந்த ரத்து உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


* மொத்த நிதி (உத்தேசம் ) ஒதுக்கீடு : 60 , 610 கோடி

* திட்ட வடிவமைப்பு நிதியத்திற்கு ரூ. 200 கோடி
* திறன் பயிற்சி மூலம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 881 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை.

* நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ. 280 கோடி
* காவல்துறைக்கு ரூ. 6 ஆயிரத்து 99 கோடி

* தீயணைப்பு துறைக்கு ரூ . 227 கோடி
* சிறைத்துறைக்கு ரூ. 281 கோடி

* மின்சார துறைக்கு 13 ஆயிரத்து 819. 03 கோடி .
* போக்குவரத்து துறை : ரூ . 1, 590 கோடி

* மெட்ரோ ரயில் திட்டம் : ரூ . 1, 032 கோடி.
* நெடுஞ்சாலை துறை ; 8 ஆயிரத்து 486. 26 கோடி

* ஊரகம் துறைக்கு : ரூ . 18, 503 கோடி
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ. 2 ஆயிரத்து 702

* பழங்குடி இன மக்கள் மேம்பாடு : ரூ . 261 கோடி
* வேளாண் துறை : ரூ . 6 938 . 57 கோடி

* சுகாதாரம் மேம்பாடு : 9, 930 கோடி
* மீன் பிடி துறை : ரூ. 743 கோடி

* கால்நடை துறையினர் 1, 188.. 88
* வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை 677 கோடி

* நகர்ப்புற வாழ்வாதாரம்: ரூ. 280 கோடி
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு 32. 74 கோடி

* நீதி துறைக்கு ரூ. 980 கோடி
* மாற்று திறனாளிகள் மேம்பாடு : ரூ. 391 கோடி

* குடி நீர் வழங்கல் : 1, 802 கோடி

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikarasu - London,யுனைடெட் கிங்டம்
17-பிப்-201617:30:43 IST Report Abuse
Karthikarasu இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 பிப்ரவரியில்.... இதே தமிழகத்தில்.... 1 லிட்டர் பால் விலை ரூ 16/- (இன்றைக்கு 46/-) 1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-) பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-) மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-) புது வாட் வரியால்.. மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800) மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-) 5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்... ரூ 6000/- (இன்றைக்கு 14000/- ) தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி) சிந்திப்பீர்.... சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது.... அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது.. இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை... விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது... இதற்கு எது காரணம்? யார் காரணம்? விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...? உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என்று தானே வாக்களித்தோம்...? சாலைகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படும் என்று தானே நம்பி வாக்களித்தோம்...?தமிழக கடன் குறையும் என்று தானே வாக்களித்தோம்..?தொழில் வாய்ப்புக்களும், புதுப்புது வேலைகளும் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்று நம்பித்தானே வாக்களித்தோம்...? செயின் திருட்டு பல மடங்கு அதிகரித்திருக்கிறது, வன்முறை கலவரங்கள் வெடித்திருக்கின்றன, ஜாதிக் கலவரங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன, ஜாதிச் சண்டைகளால் கொலைகள் பல அரங்கேறியிருக்கின்றன, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது, கூடங்குளம் தடுத்து நிறுத்தப்பட்டதா? தனி ஈழம் மலர்ந்ததா? கடைசியாக... ஜல்லிக்கட்டு நடந்ததா? காவிரியில் தண்ணீர் வந்ததா? வழக்கமான கொத்துச் சாவுகள்... குறிப்பாக செம்பரம்பாக்கச் சாவுகள் தான் நடந்தேறியிருக்கின்றன.... சிந்தியுங்கள் தமிழக வாக்காளர்களே.... ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்.... ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள் தானே? கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்... இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதை இருக்க வேண்டும். இருந்தால் வாழ்க்கை வசப்படும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-பிப்-201617:26:36 IST Report Abuse
பிரபு "எப்போதும் விழித்திருப்போம். நீங்கள் (அம்மா) சொல்வதை செயல்படுத்த". அப்படின்னா வெள்ளம் வந்தப்போ நீங்க யாரும் மக்களை பார்க்க வரலையே? அப்போ உங்களை மக்களுக்கு போய் உதவி சொல்லி செய்ய அம்மா சொல்லவே இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
krishnamoorthy - Pudukkottai,இந்தியா
17-பிப்-201614:37:16 IST Report Abuse
krishnamoorthy சட்டசபையில் "அம்மா புகழ்" பாடுவதை தடுக்க பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், இனிமேல் யாரும் சட்டசபையில் புகழ் பாட கூடாதென்று . சட்டசபையில் ஒவ்வொரு அதிமுகவினரும், சபாநாயகர் உட்பட 5 or 6 பக்கங்கள் கொண்ட கவிதையை வாசிக்கிறார்கள். குறிப்பாக பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம், செ கு தமிழரசன், சரத்குமார்,..... சட்ட சபை என்பது மக்கள் பிரச்சினைய பற்றி பேசுவதற்காக உருவாக்கிய அமைப்பு.. அதை தனி நபர் துதிபாடும் அமைப்பாக அதிமுகவினர் மாற்றி விட்டார்கள். மக்களின் பணம் அங்கு வீணடிக்கபடுகிறது. நீங்கள் புகழ் பாடுவதற்கு எவ்வளவோ இடம் உண்டு, இதை வெளியில் வைத்து கொள்ளுங்கள். முதலில் சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகளை நேரடி ஓளிபரப்பு செய்ய வேண்டும், அப்பொழுதுதான் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். நேரடி ஓளிபரப்பு செய்ய நிதி இல்லை என்று சாக்கு சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு மது மூலம் 26,000 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இலவசமாக கேப்டன் டிவில் ஒளிபரப்ப எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை. மக்கள் அனைவரும் சட்டசபைக்கு செல்ல முடியாது அதனால் தான் நாம் ஒருவரை MLA வை தேர்ந்தெடுத்து நம் பிரச்சனையை சொல்ல சட்டசபைக்கு அனுப்புகிறோம். ஆனால் அதிமுகவினால் இவர்களை பேச விடாமல் வேண்டுமென்றே அம்மா புகழ் பாடி இவர்களை எரிச்சல் அடைய செய்து, வெளிநடப்பு செய்து விடுகிறார்கள். எ.கா: விஜயகாந்த் எழுப்பிய பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டண விலை உயர்வு கேள்விக்கு இவர்கள் செய்த அராஜகங்களை நாம் சென்ற முறை பார்த்தோம், அதனால் தான் எதிர் கட்சிகள் சட்ட சபைக்கு வருவதை மறுக்கிறார்கள். இதற்கு தீர்வு, 1. நேரடி ஓளிபரப்பு, 2. அனைவருக்கும் பேசுவதற்கு சரியான கால அளவு, 3. புகழ் பாடும் தடை சட்டம் ( மரியாதைக்குரிய, திரு, மாண்புமிகு இந்த 3 வார்த்தை தான் சொல்லவேண்டும், தேவை இல்லாமல் புகழ கூடாது (காவிரியே, தங்க தாரகையே, தமிழ் நாட்டின் விடி வெள்ளிய, இதய தெய்வமே, சூரியனே, நிலாவே, அமுதே, சுரபியே, கற்பக தருவே, கண்ணே, கலைமானே, மானே, தேனே....)).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X