கடன் பாக்கி செலுத்தாதது யார் யார்? Dinamalar
பதிவு செய்த நாள் :
கடன் பாக்கி செலுத்தாதது யார் யார்?

புதுடில்லி:கடந்த, ஐந்து ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல், கடன் பாக்கி செலுத்தத் தவறியோர் பட்டியலை, ஆறு வாரத்தில் சமர்ப்பிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வாராக்கடன் உயர்வு:

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையால் தத்தளித்து வருகின்றன. டிசம்பருடன் முடிந்த காலாண்டில், பல பொதுத்துறை வங்கிகள், பெரியளவு நஷ்டத்தை சந்தித்ததாக, கணக்கு தாக்கல் செய்துள்ளன. வங்கிகளின் வாராக்கடன் தொகை, ஏழு லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுஉள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகளின் பங்கு, 85சதவீதம். இப் பிரச்னைக்கு, 2017, மார்ச்சுக்குள், தீர்வு காண வேண்டுமென, ரிசர்வ் வங்கி, காலக்கெடு விதித்துள்ளது.

 கடன் பாக்கி செலுத்தாதது யார் யார்?

இந்நிலையில், 'ஹட்கோ' எனப்படும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம், சட்டவிரோதமாக கடன்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டி, சுப்ரீம் கோர்ட்டில், பொது நல விவகார மையம் என்ற அரசு சாரா அமைப்பின் சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு :

இந்த ஊழலை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடும்படி, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஐந்து ஆண்டுகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டி யலை, ஆறு வாரத்தில் சமர்ப்பிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், வசூல் செய்யவே முடியாது என, கைகழுவப்பட்ட கடன் தொகை, பொதுத்துறை வங்கிகள் மறுசீரமைத்த கடன் தொகை விவரங்களையும் அளிக்கும்படி, உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian k - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201616:02:22 IST Report Abuse

Manian k ப சி கும்பலிடம் விசாரித்தால் எல்லாம் வெளி வரும்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-பிப்-201610:49:41 IST Report Abuse

ஆரூர் ரங்கடனுக்கான வட்டியை சரியாக செலுத்துபவர்களை த்தொந்தரவு செய்தல் சரியா? முகேஷ் அம்பானி கம்பெனிகளின் ரொக்கக் கையிருப்பே பல ஆயிரம் கோடி அவர்கள் அதிக கடன வாங்கியிருக்க அவசியமில்லை.அதானி எப்போதுமே வட்டியோ அசலோ திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர் பாபா ராம்தேவுடையது ஒரு டிரஸ்ட் அதற்கு தொழிற் கடன் எந்த வங்கியும் கொடுக்காது கடனே கொடுக்கக் கூடாது என்றால் எந்த வங்கியும் நடத்த முடியாது நமது ஊர் தமிழ் மாநீல காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்தியன் வங்கி அடமானமில்லாக் கடன்களை வாரி வழங்கியபோது உங்களைப் போன்ற கண்மணிகள் அமைதி காத்தது மறக்காது

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201610:49:24 IST Report Abuse

Chandramoulliகிங் கெமிகல் டி .ஆர். பாலு 500 கோடி க்கு கீழே உள்ளார் . அவரை ஒன்றும் செய்ய மாட்டீர்களா என்ன >>>>>> உங்களின் சட்டத்தை மாற்றுங்கள் முதலில் >>>>>>>> ஏழைகள் என்றால் உடன் ஜப்தி செய்ய வேண்டியது . மொல்லைமாரிகளுக்கு உடந்தை இந்த வங்கிகள்

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X