பொது செய்தி

இந்தியா

டில்லியில் சில காலம் வசித்தாலே நுரையீரல் பாதிப்பு!!!

Added : பிப் 17, 2016 | கருத்துகள் (12)
Advertisement
டில்லியில் சில காலம் வசித்தாலே நுரையீரல் பாதிப்பு!!!

புதுடில்லி : டில்லியில் சில காலம் வசித்தாலே போதும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் நுரையீரல் பாதிப்பு வந்து விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டில்லியில் வசிக்கும் மக்களில் 34.5 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டில்லியில் ஒற்றை-இரட்டை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சார்பில் டில்லியில் வசிப்பவர்களிடம் நுரையீரல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. புகைபிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடம், வயது, பாலினம், கல்வி, புகைப்பழக்கம், டில்லியில் வசிக்கும் கால அளவு போன்ற பிரிவுடன் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கடந்த வாரம் வெளியிட்டனர்.
ஆய்வு முடிவு அறிக்கையின்படி, டில்லியில் வசிக்கும் 34.5 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து டாக்டர் சுனீலா கார்க் கூறுகையில், டில்லியின் முக்கியமான 10 பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் நுரையீரல் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. காற்று மாசுபாட்டிற்கும், நுரையீரல் பாதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிகப்படியான காற்று மாசுபாடு முக்கிய காரணம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் அழற்சியும் ஏற்படுகிறது.
நீண்ட காலமாக டில்லியில் வசிப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. டில்லியில் 5 முதல் 9 ஆண்டுகளில் வசிப்பவர்களில் 28.7 சதவீதம் பேரும், 20 ஆண்டுகள் வரை வசிப்பவர்களில் 36.7 சதவீதம் பேருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளது. டில்லியில் வசிக்கும் காலம் அதிகரிக்க அதிகரிக்க நுரையீரல் பாதிப்பின் அளவும் அதிகமாக உள்ளது . டில்லியில் வசிக்கும் இளைஞர்களில் 5 ல் ஒரு பகுதியினர் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக 20 வயதிற்கு கீழ் உள்ள 17.5 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் சுவாச பிரச்னைகள், குறை மாதத்தில் பிறப்பது, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக லண்டன் மற்றும் இந்திய அமைப்புக்கள் நடத்திய பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
17-பிப்-201620:39:28 IST Report Abuse
ganapathy முடிந்தால் எல்லாரும் மரம் நடுங்கள். குப்பைகளை போடாதீர்கள். எல்லா பொருட்களையும் மறு சுழற்சி செய்ய பாருங்கள். கூடிய மட்டிலும் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல், அல்லது சைகிள் ... உபயோகிக்கவும்.... நீண்ட தூர பிரயாணம் என்றால், பொது போக்குவரத்து... (பஸ் அல்லது ரயில்வண்டி...)... இப்படி செய்வது நல்லது... தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே பைக். அல்லது பெட்ரோல் குறைவாய் உபயோகிக்கும் வண்டிகளை பயன்படுத்தவும்... கார் என்றால் பூலிங் திட்டத்தில் போவதும் நல்லது... வீட்டில்...மின்சாரம், மற்றும் எரிபொருள், தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்துங்கள்.... அப்போ தான் அடுத்த தலைமுறை...கொஞ்சம் வாழவும் முடியும்....
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
17-பிப்-201618:57:10 IST Report Abuse
christ இதே நிலை இந்தியாவின் அணைத்து பகுதிக்கும் வரும் காலம் அதிக தொலைவில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
17-பிப்-201618:13:12 IST Report Abuse
Snake Babu நண்பர்கள் அனைவரும் காற்று மாசுபாடு, வாகன புகை, தொழிற்சாலை மாசு எல்லாம் கூறினீர்கள். எல்லாம் சரி, இந்த மாசுகளை குறைத்தே ஆக வேண்டும். அப்படியே இது போன்ற மாசால் நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் கொஞ்சம் மரங்கள் இருக்கும் பகுதியில் இருத்து பிராணயாமம் செய்தால் அன்றைக்கு தேவையான பிராண சக்தியை பெற்றுக்கொள்ளலாம். எளிமையான மூச்சி பயிற்சி போதும். நல்ல பெருமூச்சி நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பிக்கொண்டு பின் லேசாக அதே நேரத்தில் முழுவதுமாக வெளிஎட்டாலே போதும் இது போல 12 முறை அன்றைக்கு தேவையானது கிடைத்து விடும், நுரையீஎரல் பாதிப்பும் குறையும் . நம் நிறையீரல் காக்க படும். என்னுடைய பிள்ளைகளுக்கு குழைந்தைலிருந்தெ வீசிங் பிரச்சனை. 3 மாதத்திற்கு ஒரு முறை அட்மிட் செய்து பாப்போம். காற்றின் விசேசம் தெரிந்தது. பிரச்னை இரவில் தூங்கும் போது நாம் வெளியிடும் அசுத்த காற்றையே சுவாசிக்கிறோம் என்று தெரிந்து கொண்டு. வீட்டில் ஒரு பக்கம் ஜன்னல் ஒரு பக்கம் எக்ஷாச்ட் பேன் போட்டு அந்த அசுத்த காற்றை (இரவில் மட்டும் ) வெளியேற்றி வெற்றிடம் ஆனாலே வெளியில் இருக்கும் காற்று உள்ளே வந்து நல்ல காற்றோட்டம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை வீசிக் பிரச்சனை வரவே இல்லை. அனடோமிக் theraphy க்கு நன்றி . பிராணயாமம் மூச்சி பயிற்சி தினமும் செய்து நுரையீரலை பாதுகாத்து கொள்வோம், ஆரோக்கியமாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X