பொது செய்தி

இந்தியா

மலிவு விலை ஸ்மார்ட்போன்: மக்களிடம் மவுசு...சங்கங்கள் எதிர்ப்பு

Updated : பிப் 18, 2016 | Added : பிப் 18, 2016 | கருத்துகள் (43)
Advertisement
மலிவு விலை ஸ்மார்ட்மொபைல் போன்: மக்களிடம் மவுசு...சங்கங்கள் எதிர்ப்பு

புதுடில்லி : மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், அறிமுகம் செய்துள்ள மலிவு விலை ஸ்மார்ட் மொபைல் போன் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.மிகக் குறைந்த விலை என்பதால் அதே முன்பதிவு செய்வதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் குவிந்ததால், இணையதளம் முடங்கியது. இந்நிலையில், மொபைல் போன் தயாரிப்பு சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251க்கு ஸ்மார்ட் மொபைல் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிமுகம் செய்து வைப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மனோகர் பரிக்கர் வராததால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு இன்று காலை 6 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 20ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்ததால், ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றனர். அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் பேர் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் முடங்கியது. இதனால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முன்பதிவு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், 24 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் முன்பதிவு துவங்கும் எனவும் முன்பதிவிற்கான பிரத்யேக இணையதளத்தில் தகவல் வெளியிட்டது. இப்போது பதிவு செய்வோருக்கு 4 மாதங்கள் கழித்து போன் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போனை மிகக் குறைந்தபட்சமாக ரூ.2600 தான் விற்பனை செய்ய முடியும்.

அத்துடன் வரி, விற்பனை லாபம் ஆகியவற்றை சேர்த்தால் ரூ.4000 வரை ஆகும். அதனால் ரூ.251 க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மொபைல் போன் உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-பிப்-201604:28:52 IST Report Abuse
மலரின் மகள் இந்த வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் போன் ரியாதில் இந்திய பண மதிப்பில் 2,600 ரூ.க்கு கிடைக்கிறது. போனில் தெளிவான திரை இருக்காது. மற்றபடி சீனா போன் தான். இதில் சற்று ஸ்க்ரீன் சைஸ் குறைந்த போன் SAR 89 கு அதாவது ரூபாய் 1,500 க்கு வாங்கினேன், மூன்றே நாளில் சார்ஜ் செய்வது பிரச்சினை ஆகிவிட்டது, திருப்பிக்கொடுத்தேன். கடைகாரர் கூறியது, நிறைய ப்ஹொஎ திரும்பி வந்தது என்று, சார்கிங்கில் பிரச்சினைகள். ஒரு வருட உத்திரவாதம் இருந்தது. மூன்று நாட்களுக்குள் திருப்பி தந்தால் கடைக்காரர் பெற்று கொள்வார். அதற்கு பிறகு சர்வீஸ் சென்டர் அல்லது இவர்களின் கம்பனியை தேடி அதற்கு போனின் மதிப்பை விட அதிகம் செலவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
baluc - london,யுனைடெட் கிங்டம்
20-பிப்-201601:53:17 IST Report Abuse
baluc இங்கு கருத்து கூறும் அனைவரும் மிக முக்கியமான விசயத்தினை விட்டு அனைவரின் சுய தேவைகள், சுய நலத்தின் அடிப்படையிலே கருத்து கூருகின்றனர், கூறி உள்ளனர். வாழ்வியல் அடிப்படையில் ஒரு அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகங்கள் யாவும் மக்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றினை செவ்வனே செய்வது தான் தலையாய கடமை ஆகும். இது நாம் வரலாற்றில் படித்தது. இன்று கேள்வியே தேவை இல்லை. எல்லாம் எதிர்மறை. இதன் அடிப்படையில் இந்த "மேக் இந்தியா" மற்றும் ஏனைய பொருளாதார திட்டங்கள் யாவும் எந்த அரசு ஆயினும் அத்திட்டம் கொண்டுள்ள பெயரை தவிர பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. நீங்கள் மேக் மற்றும் தான் செய்கிறீர்கள் அதனுடைய தொழில் நுட்பத்திற்கு உரிமையாளன் வேற ஒருவன் இறுதியில் லட்டு சாப்பிட போகிறவன்,நீங்கள் அதன் எச்சிதினை உண்பவர்கள். எந்த ஒரு தொழில் நிறுவனமும் லாபம் சம்பாதிப்பதை தவிர வேறு ஒரு நோக்கமும் கிடையாது. இதை நாமும் ஒத்துக்கொள்ள வேண்டும், எந்த ஒரு நிறுவனமும் தங்களுடைய முதலீடுகளுக்கு லாபம் தேவையே, ஆனால் பன்மடங்கு லாபம், தொழில் ஏகாதிபத்தியம் மற்றும் தனி முற்றுரிமை போன்ற எண்ணங்கள் சராசரி தனி மனிதனின் வாழ்வினை சீரழிக்கும் போது தான் பிரச்சனை. இந்த ப்ரீடம் 251 நிறுவனத்தின் முயற்சி மற்றும் எண்ணங்கள் வெகுஜன பார்வைக்கு சரியாகத்தான் தோன்றும், ஆனால் அடிப்படையில் இது போன்ற தொழில்நுட்ப உற்பத்தியில் நம் நாட்டின் உண்மையான சூழ்நிலை காரணிகளை யாவரும் கணக்கில் எடுத்து கொள்ளவேயில்லை. ஏனென்றல் 1991க்கு பிறகு காங்கிரசினால் கொண்டுவரப்பட்ட உலக பொருளாதாரம், தாரளமயமாக்கல் எல்லாம் நம்மை நவ நாகரிகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நாம் நினைத்து கொண்டுள்ளோம். இந்த தாரளமயமாக்கல் அடிப்படையில் மக்களும் தாரளமாக அடிப்படையே இல்லாத வாழ்வினை வாழ கற்றுக்கொண்டு அதில் பெருமை வேறு பேசுகின்றனர், ஆனால் சில பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் சில உள்நாட்டு தொழில் அதிபர்களும் பயன் பெற்றதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த தாரளமயமாக்கல் நம்மில் சில புத்திசாலி மக்களையும் வாழவைத்திருக்கிறது அதில் புதிதா வந்த நிறுவனம் தான் ப்ரீடம்251, உண்மையில் மேற் சொன்ன இந்த மிக கடினமான மற்றும் விரைவாக, நுணுக்கமாக மின்னணு தொழில்நுட்பத்துறை நாம் இன்னும் ஏட்டளவில் தான் உள்ளோம் காரணம் என்னவென்றல் இந்த தொலைபேசி உற்பத்திக்கான அனைத்து உபகரணங்களும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு பொருத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது, இது சில வகைகளில் நன்மை தான், ஆனாலும் மிகவும் விலை குறைவு என்பது ஒரு கேள்விகுறி தான்? முக்கியமாக இன்றைய ஸ்மார்ட் போன்களில் உள்ள முக்கியமான கதிர்வீச்சு மற்றும் பேட்டரி பிரச்சனை பற்றி இந்நிறுவனம் ஒன்றும் தெரிவிக்கவில்லை. இந்த ஏலேக்ட்ரோனிக் தொழில்நுட்பத்தில் உலகில் சிறந்த கட்டுபாடுகளை வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம் மற்றுமே அதன் வழிமுறைகள் இந்தியாவில் பின்பற்றுவது கேள்விக்குறியே? போகட்டும் இவ்வளவு குறைந்த விலையில் இது போன்ற பொருள்களை உற்பத்தி செய்ய உதவி செய்யும் அரசு இன்னும் நாட்டின் பெரும் பகுதி சாலை வசதி படும் மோசம். airbus உற்பத்தி தொழிர்ட்சாலை மற்றும் இன்ன பிற தொழிர்ட்சாலைகளுக்கும் உதவி செய்யும் அரசு நாட்டின் முதுகெழும்பான விவசாயம்,விவசாயிகளுக்கு மற்ற முக்கியமான சிறு தொழில்கள் இவற்றினை மறந்தே போய்விட்டது. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுவது இல்லை, சுற்றுப்புறசூழலை மாசுபடுத்துவதுடன் முழு இயற்க்கை சூழலையும் அழித்துவிட்டனர். இதனாலேயே மேற்கு நாடுகள் தங்களின் கம்பனிகளை இங்க்கு கொண்டுவருகின்றனர், இதை மக்களாகிய நாமும் எற்றுகொண்டுவுள்ளோம். ஒரு பாலைவன நாட்டில் முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர் ஆனால் இங்கு ??? இது மாதிரி மூல பொருள்களை, உபகரணங்களை இறக்குமதி செய்து முடிவு பொருள்களாக உற்பத்திசெய்த நிறுவனங்கள் சில இன்று மூடிவிட்டன ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிதாக பார்க்க விரும்பும் நாமும் அதை பழகிகொடுத்த நிறுவனங்களும் சும்மா இருக்கபோவதில்லை, இவர்களுக்கு போட்டியாக நாளை ஒருவர் 241கு கொண்டு வருவர் இவை யாவும் சராசரி மனித வாழ்க்கைக்கு தேவை இல்லாத ஒன்று. நாட்டின் பெரும்பான்மையான நதிகள் பிளாஸ்டிக் பாட்டில் கழலும், பிளாஸ்டிக் பைகழலும் நிறைந்துள்ளன, சுத்தமான குடிநீர், நல்ல மருத்துவசேவை, சாலைவசதி (சென்னையில் ரோடை காணவில்லை) இப்படி அடிப்படை வசதிகள் எல்லாம் இல்லை இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் இன்னும் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களின் நிலை முன்னேற்றமில்லை, சில நடிகை நடிகர்கள், சில மஞ்சப்பை சொந்தகாரர்கள், குறுக்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சுயநல அரசு ஊழியர்கள் இவர்களை தவிர பெரும்பாலான சராசரி மக்களின் நிலை அவ்வளவு சந்தோசமாக இல்லை, இதிலேயே வாழ பழகிவிட்டபின் இதன் உண்மைகூட பெரும் பகுதியினருக்கு கிடையாது, அவர்கள் சொல்வது அவன் திறமைகாரன் ஜெயித்துவிட்டான் அல்லது நமக்கு ஏனப்பா இந்த வம்பு என்று வாங்கிய காசுக்கு ஒட்டு நேர்மையாக போட பழகிவிட்டனர். இனி வரும்காலம் தொலைபேசிகளும், நவநாகரிக பொருட்களும், டிசைனர் ஆடைகளும், முகபெயிண்ட்டுகழும், எழிதாக கிடைக்கும் நல்ல உணவினை, காற்றினை ஆர்டர் கொடுத்து தான் வாங்கமுடியும் அந்நிலை வரும்போது தான் தெரியும், ஒன்றும் பிரச்சனை இல்லை உங்களின் பேரன் பேத்திக்கு அல்லது அவர்களின் சந்ததிகளுக்கு தான் உங்களுக்கு இல்லை. ஓரளவு கொடுத்து வைத்தவர்கள் தான் நாம்.. கடைசியாக ஒரு எம். ஆர். ராதா அவர்களின் வசனம் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும். ஏனென்றல் விதைத்தது நீங்கள் தான்..........
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
20-பிப்-201615:44:35 IST Report Abuse
Appuஇப்ப உள்ள இளைஞர்கள் பலரும் ஸ்மார்ட் போனில் விழுந்து கிடப்பது இந்த திட்டத்திற்கு சாதகமாக இருக்கலாமே? ஏதோ அரசால் ஆன நல்ல காரீயங்கள் செய்யும்போது இதுவரை இந்தியாவிற்கு சவாலாக உள்ள மற்ற முக்கியமான பிரச்சனைகளை நீங்கள் இப்போது ஏன் நினைவு படுத்தி கையிலெடுக்க கூவுகிறீர் நண்பரே? அதெல்லாம் நடக்கும்....இன்னும் அரசியல் கட்சிகளின் நீ நான் என்ற போட்டி மற்றும் ஈகோ எல்லாம் முடிய யுகம் பல இருக்கிறது...அதுக்குள்ள இவ்வளவு அவசரப்பட்டு நல்ல விசயத்த கேட்டா எப்படி?...
Rate this:
Share this comment
baluc - london,யுனைடெட் கிங்டம்
21-பிப்-201605:00:25 IST Report Abuse
balucஏதோ நண்பரே இந்த உலகை மற்றும் சிறப்பாக தமிழ்நாட்டை யாவரும் காப்பற்ற முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் விரும்புவதெல்லாம் மக்களாகிய நாம் அரசியல்வாதிகளை திறம்பட கையாள வேண்டும், அது ஒன்று தான் என் ஆசை. வெளிநாடு வாழ்க்கை மற்றும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று எனக்கு நன்றாக தெரியும். 13 வருட வாழ்க்கை தனியாக என்னை அழித்து விட்டது போகட்டும், ஆனால் இந்த அரசியல்வதிகள் நம்மையும் நம் வரலாற்றயும் தெரிந்தே அழித்து விட்டனர். சிவமும் சித்தமும் வைணவமும் தலைதோங்கிய எம் தமிழ் மாநிலம் இன்று ஆசை, புலால், வக்கிரம், சூழ்ச்சி, வன்மம், காமம், காமவெறி ,பணஆசை மற்றும் இன்ன (ஈன) பிற ஆசைகளால் அழிந்து கொண்டிருகின்றது. 5 நிமிட ஆசைக்காக 5 லக்ஷா வருட தமிழனின் உலகில் முதல் தோன்றிய மனிதனின், அவன் நாதி இன்று கிடக்கிறான். நம்மை சுற்றி உள்ள அனைத்து மாநிலங்களையும் பார்த்தல் தெரியும் நாம் எவ்வாறு உள்ளோம். என்று கேரளாவில் அணுமின் நிலையம் அமைக்க கேரளா ஸ்டேட் அனுமதி தராது கேரள உள்ளவரை அதே கொல்கத்தாவில், ஆமாம் இல்லை என்ற நிலையில் கர்நாடக இந்தியாவின் பிசினசினஸ் காபிடல் மும்பை கொண்டுள்ளது ஒரே ஒரே அணு ஸ்டேஷன் இப்படி எல்லா ஸ்டேட்களையும் பார்த்தல் முட்டாள் தமிழ் நாட்டில் மட்டும் தான் இரு இடதில் அணு மின் நிலையங்கள் உள்ளன . அட லூசு தமிழனே உனக்கு தண்ணியும் தர மறுக்கிறான் கர்நாடக , கேரளா மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எப்போதும் குறைவான ஒதுக்கிடு , ஆனால் இந்திய ராணுவத்தின் இன்பான்றி, அர்டிலேரி பிரிவுகலில் முக்கியமானது தமிழ் நாட்டில் உள்ளது மக்கள்ளே, இந்தியாவிற்காக நீ உயிரையும் கொடுப்ப ஆனால் உன்னக்கு ஒரு மயிரையும் இந்திய அரசு தராது .ப்ரிடிஷில் வாழும் நான் தமிழ் மக்களே ஒரு ஓட்டுக்கு 50000 தருகிறேன் மற்றும் குறைந்த பட்ச வாக்குறுதி தருகிறேன் உங்கள் வாழ்க்கைக்கு, இது ஊழல் இல்லை முற்றிலும் பிசினஸ் உங்கள் காசை எடுக்கமாட்டேன் ஆனால் உங்களுக்கு மாதம் மாதம் மிநிமும் உதிரவ்காத காசு வரும் . again MR. m. r.ratha வார்த்தைகள் இந்த நாடும் நாட்டு மக்களும் நசமகபோகட்டும் .............
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
19-பிப்-201618:30:08 IST Report Abuse
Sathish நல்ல விஷயங்களுக்கு முட்டுக்கட்டை போட வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். இதுவரை கொள்ளை லாபம் பார்த்து மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு ரோஷத்தை பாருங்கள். உங்க எதிர்ப்ப கொண்டுபோய் குப்பைதொட்டியிலே போடுங்கடா.
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
20-பிப்-201615:46:42 IST Report Abuse
Appuபாஸ்,,நீங்க சொல்லுற குப்பய போட உருப்படியா குப்ப தொட்டி தேவையான இடங்களில் கூட நம்ம நாட்டுல இல்ல....அத்த முதல்ல உங்க ஜனரஞ்சகமான கட்சிகள் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேளா உங்களுக்கு புண்ணியமா போகும்....அப்பால நீங்க சொன்னா மாறி குப்ப தொட்டில இத்த எல்லாம் தூக்கி போட்ரலாம்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X