அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
'வெள்ளம் பாதித்த தொகுதிகள் எங்களுக்கே'
தி.மு.க., முடிவால் காங்., கடும் அதிர்ச்சி

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், காங்., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தி.மு.க., காங்., கடும் அதிர்ச்சி,வெள்ளம்,தொகுதிகள்

கடந்தாண்டு அக்., மாதம் துவங்கி டிச., மாதம் வரை பெய்த பெரு மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது; நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட்டது.நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு செய்திருந்தால்,

இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்ற கருத்து, பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இதனால், உடைமைகளை இழந்த பொதுமக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.

இம்மாவட்டங்களில், ஆளுங்கட்சி செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, இத்தொகுதிகளில் போட்டியிட்டால், அ.தி.மு.க.,வை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணம் தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, திருவள்ளூரில் உள்ள, 10 தொகுதிகள், சென்னையில் உள்ள, 16 தொகுதிகள், காஞ்சிபுரத்தில் உள்ள, 11 தொகுதிகள், கடலுாரில் உள்ள, ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிட, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துாத்துக்குடியில் உள்ள, ஆறுதொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் திட்டம், தி.மு.க.,விடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளில் சிலவற்றில் போட்டியிட, காங்., கட்சியும் விரும்புகிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி முடிவான நிலையில், காங்., நிர்வாகிகள் பலரும் தொகுதி தேடும்

Advertisement

நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக, தி.மு.க.,வினரை சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளனர்.அப்போது, 'இந்த தொகுதிகளை மறந்து விடுங்கள்; மற்ற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெறுங்கள்' என, தி.மு.க.,வினர், காங்கிரசாரிடம் கூறி வருகின்றனர். இதனால், காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- -நமது சிறப்பு நிருபர்- -


Advertisement

வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-பிப்-201620:18:47 IST Report Abuse

Pasupathi Subbianநீ அவுல் கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன் , ஊதி ஊதி இருவரும் சாப்பிடலாம். கேக்கிறவன் கேனையனா இருந்தால் கேப்பையில நெய் ஒழுவுது என்பர்

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
20-பிப்-201619:00:26 IST Report Abuse

Balaji மக்களின் கோபம் இப்பொழுது தி மு க வின் மேல் தான். ஜெயா ஒரு பெரிய சொத்து குவிப்பு வழக்கையே மாற்றி விட்டார். மு க ஜுஜுபி

Rate this:
Govindaraj - Brunei  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201617:10:08 IST Report Abuse

Govindarajகண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிடும் என்பது மாதிரி போல

Rate this:
மேலும் 99 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X