தமிழ்நாடு

சிவகங்கையில் துப்புரவு ஊழியர் தேர்வில் முறைகேடா:கலெக்டர் எச்சரிக்கை

Added : பிப் 20, 2016
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தேர்வில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு பட்டியலை சமர்பிக்க நகராட்சி கமிஷனருக்கு, கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை நகராட்சியில், துப்புரவு பணிகளை மேற்கொள்ள 15 ஊழியர்களை நியமித்துக்கொள்ள, நகராட்சி நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டது. நகராட்சி சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இப்பணிக்கு

சிவகங்கை:சிவகங்கை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தேர்வில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு பட்டியலை சமர்பிக்க நகராட்சி கமிஷனருக்கு, கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை நகராட்சியில், துப்புரவு பணிகளை மேற்கொள்ள 15 ஊழியர்களை நியமித்துக்கொள்ள, நகராட்சி நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டது. நகராட்சி சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இப்பணிக்கு 150க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு நகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், துப்புரவு ஊழியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இம்மனுவின் மீது விசாரணை நடத்த சிவகங்கை கலெக்டர் மலர்விழிக்கு, தனிப்பிரிவில் இருந்து உத்தரவு வந்தது. நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன், துப்புரவு ஊழியர் பணிக்கு சிலரிடம் பணம் வசூல் செய்துள்ளதாகவும், தேர்வில் எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. நகராட்சி கமிஷனரிடம், துப்புரவு ஊழியர் நியமனத்திற்கான நேர்முக தேர்வினை உரிய விதிப்படி நடத்த வேண்டும். ஆட்கள் தேர்வான பட்டியலை ஒப்புதல் பெற்றுத்தான், நியமன உத்தரவை வெளியிட வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X