தமிழ்நாடு

ஈஞ்சம்பாக்கம் ஆளும்கட்சி கவுன்சிலர் மிரட்டல்!அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரகளை

Updated : பிப் 20, 2016 | Added : பிப் 20, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈஞ்சம்பாக்கம்:ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவர்களையும், ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிய அ.தி.மு.க., கவுன்சிலர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மருத்துவமனை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் வ.உ.சி., தெருவில், அரசு புறநகர்
கவுன்சிலர் மிரட்டல்!

ஈஞ்சம்பாக்கம்:ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவர்களையும், ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிய அ.தி.மு.க., கவுன்சிலர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மருத்துவமனை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் வ.உ.சி., தெருவில், அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. காலை 7:௦௦ முதல் மாலை, 5:மணி வரை இயங்கி வரும் அந்த மருத்துவமனையில், கிழக்கு கடற்கரை சாலையின், பல்வேறு பகுதிகளில் இருந்து, பகுதிவாசிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 'காலி செய்து விடுவேன்'
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மருத்துவமனைக்கு, 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், அ.தி.மு.க., கவுன்சிலர் வெ.அண்ணாமலையின் நெருங்கிய உறவினர்கள், ராஜா மற்றும் லலிதா ஆகியோர், சிகிச்சை பெற சென்றனர். அப்போது மருந்து வாங்குவதில், அவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலரின் உறவினர்கள், தகாத வார்த்தைகளைப் பேசினர். மேலும் கவுன்சிலரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனைக்குள் வேகமாக நுழைந்த கவுன்சிலர் அண்ணாமலை, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை தகாத வார்த்தைகள் பேசி திட்டினார். தட்டிக்கேட்ட மருத்துவர் வெனிஸ் என்பவரை தாக்க முற்பட்டார். 'உங்களை காலி செய்து விடுவேன்' என, மிரட்டினார்.அவரது மோசமான நடவடிக்கைகளைப் பார்த்த மருத்துவர்கள், சிகிச்சை பெற வந்த பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:இந்த மருத்துவமனையில், நாங்கள் ஊழியர்களாக பணிபுரிந்தாலும், உயிருக்கு பயந்து கவுன்சிலரின் அட்டூழியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதுகுறித்து, காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்.
இன்று (நேற்று) மருத்துவமனைக்குள் புகுந்து, பொதுமக்கள் முன்னிலையில் எங்களை ஆபாசமாக திட்டி, மிரட்டுகிறார். நாங்கள் பணி செய்வதா; உயிருக்கு பயந்து சாவதா?மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். கவுன்சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நீலாங்கரை காவல் நிலையத்தில் மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டு, பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்து சென்றனர்.தொடரும் மிரட்டல், அடாவடிஈஞ்சம்பாக்கம் மருத்துவமனையைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால், மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலரின் ஆதரவாளர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு, பாட்டில்களை வீசுதல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.மேலும், மருத்துவமனை வளாகத்தில் கவுன்சிலரின் உறவினர்கள் கார், வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் பெரும் அவதி நேர்கிறது. இதுகுறித்து கவுன்சிலரிடம் பகுதிவாசிகள் புகார் தெரிவித்த போது, அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி இருக்கிறார்.
காசுக்கு தானே ஓட்டு போட்டீங்க!இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:இந்தப் பகுதியில், நாங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக, கவுன்சிலர் அண்ணாமலைக்கு பயந்து கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். சாலை சரியில்லை; குடிநீர் வரவில்லை என்று புகார் தெரிவித்தால், தகாத வார்த்தைகள் சொல்லி திட்டுவார். 'சும்மாவா ஓட்டு போட்டீங்க! காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க' என்று அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். அரசு புறம்போக்கு நிலத்தை மடக்கி, ஆவணங்களை மாற்றி, அப்பாவி மக்களிடம் விற்று விடுகிறார்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களையும் தகாத வார்த்தைகள் கூறி திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மண்டலக் கூட்டங்களில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் மற்றும் சுகாதார அதிகாரிகளையும் திட்டியுள்ளார். பத்திரிகையாளர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டிஇருக்கிறார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து வந்த புகாரையடுத்து, நான் அவர்களை தட்டிக் கேட்டேன். மருத்துவமனை வளாகத்தில், கார்களை நிறுத்த வேண்டாம் என நான் சொல்லியும், என் உறவினர்கள் கேட்பதில்லை.வெ.அண்ணாமலை, ௧௯௬வது வார்டு ஈஞ்சம்பாக்கம் கவுன்சிலர்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201615:23:59 IST Report Abuse
Brindha Sundar கட்சி தலைமை மற்றும் அரசு தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழக மக்களே வாக்களிப்பதற்கு முன் நன்கு சிந்தியுங்கள். இதே நிலை தொடர வேண்டுமா அல்லது மாற வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X