பொது செய்தி

இந்தியா

பிரபல வில்லன் நடிகர்பிரதீப் சக்தி மரணம்

Added : பிப் 21, 2016
Share
Advertisement
ஐதராபாத்:தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த, பிரபல நடிகர் பிரதீப் சக்தி, 60, அமெரிக்காவில் காலமானார். கடந்த, 1980களில், தெலுங்கு திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தவர், பிரதீப் சக்தி. தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். கமல் ஹாசனின் நாயகன் படத்தில், கொடூரமான வில்லத்தனம் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து பிரபலமானார். இதே போல், குணா படத்திலும் காமெடி
பிரதீப் சக்தி மரணம்

ஐதராபாத்:தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த, பிரபல நடிகர் பிரதீப் சக்தி, 60, அமெரிக்காவில் காலமானார். கடந்த, 1980களில், தெலுங்கு திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தவர், பிரதீப் சக்தி. தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். கமல் ஹாசனின் நாயகன் படத்தில், கொடூரமான வில்லத்தனம் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து பிரபலமானார். இதே போல், குணா படத்திலும் காமெடி கலந்த வில்லனாக நடித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த பிரதீப் சக்தி, 1990களுக்கு பின், அமெரிக்காவுக்கு சென்று, அங்கு ஓட்டல் நடத்தினார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு, மகளுடன் தங்கியிருந்த பிரதீப் சக்தி, அவ்வப்போது ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் நடித்தார். இவர், சுப்பிரமணியம் பார் சேல் என்ற தெலுங்கு படத்தில் கடைசியாக நடித்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். பிரதீப் சக்தி மறைவுக்கு தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X