பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புதுமை!
ஓட்டளித்ததை உறுதி செய்யும் வசதி நாடு முழுவதும் அமல்!
2019 பொதுத் தேர்தலில் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு

புதுடில்லி : ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளை, வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையிலான புதிய கருவியின் பயன்பாடு, அடுத்த பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் பரவலாக்கப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தெரிவித்தார். இதற்காக, 14 லட்சம் கருவிகள், 1,500 கோடி ரூபாயில் வாங்கப்படும்.

ஓட்டளித்ததை உறுதி செய்யும் வசதி நாடு முழுவதும் அமல்! 2019 பொதுத் தேர்தலில் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு

பொதுத் தேர்தலில், 10 ஆயிரம் டன் காகிதம் பயன்படுத்துவதை தடுக்கவும், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் வகையிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர நடைமுறை அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1998ல், கேரள மாநிலம், வடக்கு பரவூர் சட்ட சபை இடைத் தேர்தலின் போது, சில ஓட்டுச் சாவடிகளில், முதல் முறையாக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது; 2004 முதல், நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

14 லட்சம் கருவிகள் :

இதற்கிடையே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். வாக்காளர்கள் பதிவு செய்த ஓட்டு, அவர் தேர்வு செய்த வேட்பாளருக்கு தான் பதிவானதா என்பதை உறுதி செய்வதற்கான நடைமுறை அப்போது இல்லாததால், இதுபோன்ற புகார்கள் வலுப்பெற்றன.இதையடுத்து, இந்த பிரச்னையை தவிர்க்க, ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் கருவியை, தேர்தல் கமிஷன் பயன்படுத்த தொடங்கியது. அங்கொன்றும், இங்கொன்றுமாக, சில ஆயிரம் இயந்திரங்களே தற்போது பயன்பாட்டில் உள்ளன. விரைவில்

நாடு முழுவதும் இந்த கருவியை அறிமுகம் செய்ய தேவையான, 14 லட்சம் கருவிகள், 1,500 கோடி ரூபாய் செலவில், படிப்படியாக வாங்கப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
டில்லியில் நேற்று நடந்த, தேர்தல் முறைகள் குறித்த கருத்தரங்கில், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி பேசியதாவது: 'ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் வகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர் பதிவு செய்யும் சின்னம்,மற்றொரு இயந்திரத்தில் வாக்காளருக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி இந்த புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 20 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டு, பல தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டன; ஒரு புகார் கூட வரவில்லை. ஓட்டுப் பதிவை, 100 சதவீதம் உறுதி செய்யக் கூடிய இந்தக் கருவியை, வரும், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பு உருவாக வில்லை :

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இணையம் வாயிலாக ஓட்டுப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உருவாகவில்லை. இவ்வாறு ஜைதி கூறினார்.

தமிழகத்தில் 17 தொகுதிகளில்

* ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் கருவி, முதல் முதலாக, 2013ல், நாகலாந்து மாநிலம், நோக்சன் சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்பட்டது* கடந்த லோக்சபா தேர்தலின் போது, மத்திய சென்னை, பெங்களூரு, காந்திநகர், லக்னோ உட்பட எட்டு தொகுதிகளில்பயன்படுத்தப்பட்டது.* வரும், சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் கருவி, சென்னை அண்ணாநகர், வேலுார், கிருஷ்ண கிரி, சேலம் வடக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, திண்டுக்கல், திருச்சி மேற்கு.மற்றும் கடலுார், தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை கிழக்கு,

Advertisement

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய, 17 தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

எப்படி செயல்படும்?

* வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டளிப்பை வாக்காளர் சரி பார்க்கும் உறுதியளிப்பு சீட்டு என்ற இந்த புதிய முறையின் கீழ், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன், சிறிய பிரின்டர் போன்ற கருவி இருக்கும்* வாக்காளர், தன் ஓட்டை பதிவு செய்ததும், இந்த இயந்திரத்தில் இருக்கும் காகிதத்தில், ஓட்டு எந்த சின்னத்திற்கு பதிவு செய்யப்பட்டதோ, அந்த சின்னத்தின் படம், சில வினாடிகள் தெரியும். அதை வாக்காளர் பார்த்து, தான் தேர்வு செய்த வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவாகியுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்* இவ்வாறு தெரியும், உறுதியளிக்கும் படம் அல்லது சீட்டு, அந்த இயந்திரத்தின் உள்ளேயே இருக்கும்; வெளியில் எடுக்க முடியாது* தன் ஓட்டு, தான் விரும்பிய வேட்பாளருக்கு தான் பதிவாகியுள்ளது என்பதை வாக்காளர் உறுதி செய்ய முடியும்* தங்கள் ஓட்டு, மற்றொருவரின் பெயரில் பதிவாகிறது; அழிக்கப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியும்* இந்த ஓட்டுப் பதிவு உறுதி சீட்டில் பதிவாகும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-பிப்-201619:37:01 IST Report Abuse

மலரின் மகள்அதை பிரிண்ட் அவுட் எடுத்து வாக்குப் பெட்டியில் போடும் படி செய்ய வேண்டும். ஓட்டு என்னும் பொது சந்தேகமோ எதிர்ப்போ வரும்போது அதையும் எண்ணி சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் ரேண்டம் முறையில் இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் பிரிண்ட் அவுட் ஓட்டுகளையும் அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். செய்வதை திருந்த செய் என்பதை தேர்தல் அதிகாரிகளும் உணரட்டும்.

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
24-பிப்-201616:26:59 IST Report Abuse

Murukesan Kannankulamஅருமையானது தான், ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் எதாவது வழி பிறக்க வேண்டுமே

Rate this:
Jahabar Ali - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-பிப்-201613:29:51 IST Report Abuse

Jahabar Aliபிரிண்ட் செய்த சீட்டை பெட்டியில் பழைய முறையில் போட வைத்து பிரச்னை ஏற்படும் போது அதனை கவுன்ட் செய்ய வேண்டும்

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X