ஜெ., தீர்ப்பை எதிர்த்த அப்பீல் வழக்கில் விசாரணை ஆரம்பம்; நீதிபதி குமாரசாமி உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா வாதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜெ., விசாரணை, நீதிபதி குமாரசாமி,கர்நாடகா வாதம்

புதுடில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று துவங்கியது. 'கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, கர்நாடக அரசு வாதிட்டது.

ஜெ., விசாரணை, நீதிபதி குமாரசாமி,கர்நாடகா வாதம்

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர் சார்பில்,

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் இறுதி வாதம், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்றுதுவங்கியது.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தன் வாதத்தை துவங்கினார்.
அவர் வாதிட்டதாவது: வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க முயற்சி நடக்கிறது. 1996ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, தன் அதிகாரத்தின் மூலம், 20 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்துள்ளனர். இது, நீதித் துறையை அழிக்க முயலும் முயற்சி; இதை அனுமதிக்கக் கூடாது. தினசரி, விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

கர்நாடக அரசின் சார்பில், தன் வாதத்தை எடுத்துரைக்க, மூன்று நாள்அவகாசம் கோரினார் வழக்கறிஞர் தவே; அதற்கு, அமர்வு அனுமதி அளித்தது.

Advertisement


ஒருதலைபட்சமானது:

வாதத்தின் போது, கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியதாவது: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு, சட்டவிரோதமானது; ஒருதலைபட்சமானது. அதில், வெளிப்படையாக தெரியும் அளவுக்கு கணக்கு குளறுபடிகள் உள்ளன. அதனால், அந்த தீர்ப்பை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக, 8.12 சதவீதம் அளவுக்கே சொத்துகள் சேர்த்ததால், விடுதலை செய்வதாக கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தன் தீர்ப்பில் கூறி உள்ளார். ஆனால், முறையாக கணக்கிட்டால், வருமானத்தை விட, 168 சதவீதம் அதிக சொத்தை சேர்த்துள்ளனர். இவ்வாறு தவே வாதிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (243)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
24-பிப்-201620:41:59 IST Report Abuse

Balajiதேர்தலுக்கு முன்பே தீர்ப்பு சொல்லிடுவாங்களா தெரியலை......

Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
24-பிப்-201619:43:26 IST Report Abuse

Tamilachiஅந்தம்மா எது செய்யலேன்னாலும் பரவாயில்ல....அவங்க செஞ்ச மூணு விஷயம் நம்ம எல்லாரையும் எதிர்கால சவ குழியில இருந்து காப்பாத்தி இருக்கு. 1. காவேரி உரிமையை நிலை நாட்டி காவேரி தண்ணீர் பெற்று தந்தது. 2. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வுக்கு போராடி அதனை பெற்று தந்தது. 3. மீதேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது. 4. கெயில் குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படகூடாது என்று இன்றும் போராடுவது. 5. வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் உள்ளே புகுந்து நம் பொருளாதாரம் சீர்குலையாமல் காப்பற்றியது. திமுகவுக்கு சொம்படிக்கும் நண்பர்கள் கூட மனசாட்சி இருந்தால் இதனை ஏற்றுகொள்வார்... கட்டுமரம் மட்டும் இந்த முறை பதவிக்கு வந்திருந்தால் இவை அனைத்தும் நடந்து தமிழகம் இந்நேரம் பாதி சுடுகாடாக மாறி இருக்கும்....டெல்டா தஞ்சை இந்நேரம் காய்ந்திருக்கும்... முக குடும்பம் ஒரு அமௌண்ட் கையில் பார்த்திருக்கும்...

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
24-பிப்-201621:24:41 IST Report Abuse

Chandramoulliஉண்மையான கருத்துக்கள் . மக்களுக்கு மஞ்ச துண்டின் மீது உள்ள வெறுப்பு இன்னமும் அகலவில்லை . ஜெயலலிதா அவர்களே எவ்வளவோ மேல் என்ற எண்ணம் தான் அதிகம் உள்ளது...

Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
24-பிப்-201619:34:44 IST Report Abuse

Tamilachiஎல்லாரும் இங்கே அந்தம்மா உள்ள போகணும்... அதிமுக தோக்கணும்னு சொல்றீங்க...ஆனா அந்தம்மா உள்ள போனாலும் ஜெயிக்கும்(அனுதாப அலை) உள்ள போகலைன்னாலும் ஜெயிக்கும்...(பிரச்சாரம்)....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-201620:39:12 IST Report Abuse

தமிழ்வேல் குற்றம் புரிந்தவர் அது யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றார்கள்.....

Rate this:
மேலும் 238 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X