அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரதான சாலைகளை மறித்து கூட்டம்:
கட்சிகள் மீது பொதுமக்கள் காட்டம்

பிரதான சாலைகளை மறித்து, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்துவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

 பிரதான சாலை, கூட்டம், கட்சிகள்,  பொதுமக்கள் காட்டம்

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் சார்பிலும் தெருமுனை, செயல்வீரர் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பேரணி நடக்கின்றன. இரண்டு நாட்கள்அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், பிரதான சாலைகளை மறித்து நடக்க துவங்கி உள்ளன. இதற்காக, முதல் நாளே ஏற்பாடுகள் துவங்கி விடுவதால், குறைந்த பட்சம், இரண்டு நாட்களாவது பகுதிவாசிகள் கடும் அவதிப்பட நேரிடுகிறது.

அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், அண்ணா சாலையையும்

இணைக்கும் பிரதான பல்லவன் சாலையை முழுவதுமாக மறித்து, முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில், பயணிகள் பலர் ரயிலைகோட்டை விட்டனர்.

கடும் அதிருப்தி:

போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்காக, பிற்பகல், 2:00 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விழா முடியும் வரை (இரவு வரை) சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.முன்னதாக சாலையோர நடைபாதை கடை நடத்துவோருக்காக, இட்லி பாத்திரம், காஸ் அடுப்பு, தவலை போன்ற பரிசு பொருட்கள், முதல்வரின் ஸ்டிக்கர்ஒட்டப்பட்ட நிலையில், மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

போலீஸ் அனுமதி கொடுத்தது எப்படி?

உட்புற சாலைகளில் நடக்கும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பரபரப்பான சென்னையின் பிரதான சென்ட்ரல் ரயில்

Advertisement

நிலையத்திற்கு செல்லும் சாலையை மறித்து கூட்டம் நடத்த, போலீசார் எப்படி அனுமதி வழங்கினர் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு அருகே தீவுத்திடல், ராணுவ மைதானம், ராணுவ உணவகத்திற்கு எதிரே நடைபாதையை ஒட்டி விசாலமான காலி இடம் என மக்களுக்கு இடையூறு இன்றி கூட்டம் நடத்த ஏராளமான இடங்கள் இருந்தும், கட்சியினர் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளதும், காவல்துறை அனுமதி வழங்கியதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
24-பிப்-201620:51:07 IST Report Abuse

Somiah Mசென்னையில் சமீபத்திய பெரு மழை மற்றும் வெள்ளப் பெருக்கிற்கு பின் இப்பொழுது தான் சாலைகள் எல்லாம் நல்ல முறையில் செப்பனிடப் பட்டுள்ளன . அரசு சாலைகளில் பொது கூட்டம் நடத்த அனுமதிக்குமேயானால் செப்பனிடப் பட்ட சாலைகள் அனைத்தும் சீரழிந்து போகும் .மீண்டும் பெருந்தொகை சிலவு செய்யப் படவேண்டி வரும் . மக்கள் பணம் இவ்வாறு வீணடிக்கப்பட வேண்டுமா ?மேலும் பொது மக்களுக்கும் போக்கு வாரத்திற்கும் பெருத்த இடையூறு ஏற்படும் .இவை எல்லாம் தேவைதானா என்பதை மாண்பு மிகு முதல்வர் அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் .

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
24-பிப்-201616:24:15 IST Report Abuse

Murukesan Kannankulamதேர்தல் கமிசனர் சேஷன் போல் நல்ல ஒரு கமிசனர் வந்தால் மட்டுமே - இந்த பேனர் கட்டவுட் / அடாவடி கூட்டம் நடத்துவதை கட்டுபடுத்த முடியும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-201613:20:42 IST Report Abuse

இந்தியன் kumarமீண்டும் சேஷன் பன்னீர் செல்வமாய் திரும்பி வரணும். இதற்கெல்லாம் முடிவு கட்டணும்.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X