அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
பஸ் எரித்த 'விசுவாச' தொண்டன்
ஜெ., நடவடிக்கை எடுப்பாரா?
பஸ். விசுவாச தொண்டன், ஜெ.,

'முதல்வருக்காக பஸ்சை எரித்து சிறை சென்ற, உண்மை தொண்டன்' என, அ.தி.மு.க., நிர்வாகி பேனரில் குறிப்பிட்டிருப்பது, அனைத்து தரப்பினரிடமும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக இருப்பவர் பரிமளம். நகராட்சி கவுன்சிலராக உள்ளார். மேலும், தமிழ்நாடு பட்டு கூட்டுறவு நிறுவன இயக்குனர், தீரர் சத்தியமூர்த்தி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளார்.இவர், முதல்வரின் கவனத்தை கவர, 100 அடி நீளத்திற்கு, பேனர் வைப்பது, கட்டை விரலை அறுத்து கொள்வது என, வெற்று விளம்பரத்துக்காக, அதிரடியான செயல்களில் ஈடுபடுவது வாடிக்கை.கடந்த லோக்சபா

தேர்தலில், ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக, 'அ.தி.மு.க., வேட்பாளர் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்வெற்றி பெறுவார்' என, எண்ணிக்கையை குறிப்பிட்டு, பேனர் வைத்து சலசலப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான கணேசனுக்கு எதிராக, முதல்வரிடம் புகார் அளிக்க, 53 வேன்களில், ஆட்களை திரட்டிக் கொண்டு, போயஸ் கார்டன் வந்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.அந்த பேனர் கீழேதன் பெயருக்கு முன்பாக 'அம்மாவிற்காக பஸ்சை எரித்து, சிறை சென்ற

Advertisement

அம்மாவின் உண்மை தொண்டன்' எனக் குறிப்பிட்டுள்ளார். பஸ் எரிப்பை பெரும் சாதனையாக அவர் குறிப்பிட்டிருப்பது, மோசமான முன் உதாரணமாக கருதப்படுகிறது. என்னதான் கட்சியின் மீதும் தலைமை மீதும் தன்னை விசுவாசியாக காட்டிக் கொண்டாலும் இப்படிப்பட்டவர்களின் செயல்பாடுகளை கட்சித் தலைமை ஊக்குவித்தால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காரியங்களை பலரும் துணிச்சலாக செய்யக்கூடிய ஆபத்து காத்திருக்கிறது. எனவே இதுபோன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
25-பிப்-201610:48:17 IST Report Abuse

Visu Iyerஅவர் சொன்னது பேப்பரில் பஸ் என்று எழுதி அதை எரித்ததாக... மக்கள் தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்வது.... அல்லது கட்சி தலைமை தான் என்ன செய்வது... எல்லோரும் வழக்கம் போல் அ தி மு க விற்கே ஓட்டு போடுங்கள்...

Rate this:
APS Raja - Chennai,இந்தியா
25-பிப்-201610:22:27 IST Report Abuse

APS Rajaஉச்ச நீதிமன்ற உத்தவின்படி இந்த ஆளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து அந்த பஸ்சுக்கான விலையை கட்சியிடம் இர்ருந்து வசூலிக்கவேண்டும்

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
25-பிப்-201610:18:54 IST Report Abuse

JAY JAY ஜெயலலிதா இதனை அனுமதிப்பது தவறு,....தூக்கி கடாசுங்க அந்த உண்மை தொண்டனை...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X