சர்வதேச குளிர்பான போட்டிகளுக்கு இடையே நூற்றாண்டை தொட்ட நம்மூர் 'காளிமார்க்'

Added : பிப் 24, 2016 | |
Advertisement
சென்னை, :'கோக கோலா, பெப்சி' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின், உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் முற்றிலும் அழிந்து போயின. ஆனால், விருதுநகர் மாவட்டம், விருதுபட்டியில், 1916ல், கோலி சோடா தயாரிப்பு நிறுவனமாக உதயமான, 'காளிமார்க்' நேற்று, ஒரு நுாற்றாண்டை கடந்துள்ளது.பாட்டில்களின் மீது, 200 மி.லி., என முதன்முதலாக அச்சிட்டு விற்பனை செய்தது; கடும் போட்டியிலும் துவளாமல்
 சர்வதேச குளிர்பான போட்டிகளுக்கு இடையே நூற்றாண்டை தொட்ட நம்மூர் 'காளிமார்க்'


சென்னை, :'கோக கோலா, பெப்சி' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின், உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் முற்றிலும் அழிந்து போயின. ஆனால், விருதுநகர் மாவட்டம், விருதுபட்டியில், 1916ல், கோலி சோடா தயாரிப்பு நிறுவனமாக உதயமான, 'காளிமார்க்' நேற்று, ஒரு நுாற்றாண்டை கடந்துள்ளது.பாட்டில்களின் மீது, 200 மி.லி., என முதன்முதலாக அச்சிட்டு விற்பனை செய்தது; கடும் போட்டியிலும் துவளாமல் சிறப்பாக செயல்பட்ட காளிமார்க் நிறுவனத்துக்கு, 2015ல், 'குளிர் பானங்களில் மிகச் சிறந்த பிராண்ட்' என்ற அங்கீகாரம் கிடைத்தது.
காளிமார்க் நிறுவன நிர்வாகம், தற்போது, நான்காவது தலைமுறை நிர்வாகத்தை கண்டுள்ளது. 'சோலோ, பொவன்டோ, டிரையோ, புருட்டாங்' போன்ற குளிர் பானங்களை
விற்பனை செய்து வரும் காளிமார்க் நிறுவனம், 'விப்ரோ' என்ற புதிய பன்னீர் சோடாவை அறிமுகம் செய்துள்ளது.சென்னையில், நடந்த நுாற்றாண்டு விழா மற்றும் புதிய குளிர்பான அறிமுக நிகழ்ச்சியில், நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே.பி.ஆர்.தனுஷ்கோடி கூறியதாவது: புதிதாக
அறிமுகம் செய்யப்பட்டுள்ள,'விப்ரோ' இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெறும். தமிழகத்தில், ஏகோபித்த வரவேற்பை தக்க வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள், காளிமார்க் விற்பனை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 2017ல், ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டி தொழில்
நகரத்தில், புதிய ஆலை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X