தி.மு.க., துவக்கிய விளம்பர பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்பு: சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., - பா.ம.க., பதிலடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., விளம்பர பிரசாரம், தேர்தல் களம், விறுவிறுப்பு,  சமூக வலைதளம், அ.தி.மு.க.,  பா.ம.க.,

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., தரப்பு துவக்கிய விளம்பர பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த விளம்பரத்துக்கு எதிராக அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வுக்கும், ஆளுங்கட்சியாக துடிக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விளம்பர யுத்தம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவர பல்வேறு நுாதன பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் தி.மு.க., சார்பில் தமிழகத்தின் பிரதான பத்திரிகைகளில் '5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க; பேனர்ல பார்த்திருப்பீங்க; ஏன் 'டிவி'யில பார்த்திருப்பீங்க; நேர்ல பார்த்திருக்கீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' என கிண்டலாக விளம்பரம் செய்தனர்.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆளுங்கட்சியினரிடம் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. உடனடியாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி களத்தில் குதித்தது. மேலும் அ.தி.மு.க., ஆதரவாளர்களும் பதிலடி விளம்பரங்களை சமூக வலைதளங்களில்

அள்ளி தெளித்து விட்டனர்.

தி.மு.க., விளம்பர பிரசாரம், தேர்தல் களம், விறுவிறுப்பு,  சமூக வலைதளம், அ.தி.மு.க.,  பா.ம.க.,


'மீம்ஸ்' முறையிலும் கிண்டல்:

ஒரு சில அ.தி.மு.க.,வினர் பெரிய பெரிய விளம்பர போஸ்டர்களை அவசர அவசரமாக தயார் செய்து சென்னையின் பல்வேறு இடங்களிலும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில் '5 வருஷத்துல, கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பார்த்திருப்பீங்க; நடிகருங்க கலை விழாவில பார்த்திருப்பீங்க; மானாட மயிலாடவுல பார்த்திருப்பீங்க; சட்டசபையில பார்த்திருக்கீங்களா? திருவாரூர் தொகுதியிலாவது பார்த்திருக்கீங்களா? என்னடா இப்படி பண்றீங்களேடா...?' என்ற காட்டமான விளம்பரங்களை பரப்பி வருகின்றனர்.கருணாநிதியை மட்டுமின்றி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை 'மீம்ஸ்' முறையில் கிண்டலடித்தும் தகவல்கள்

Advertisement

பரப்பப்படுகின்றன.

பா.ம.க.,வும் குதித்தது:

இவர்களுக்கு போட்டியாக, பா.ம.க., சார்பில் 'பல வருஷமாக தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பார்த்திருப்பீங்க; அ.தி.மு.க., ஆட்சி பார்த்திருப்பீங்க; ஏன் காங்., ஆட்சி கூட பார்த்திருப்பீங்க; பா.ம.க., ஆட்சி பார்த்திருக்கீங்களா...?' என, சந்தடி சாக்கில் தங்களது ஆட்சி கனவை விளம்பரமாக பரப்பி வருகின்றனர்.

நொந்து போன மக்கள்:

கட்சி சாராதவர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., விளம்பரங்களை இணைத்து கீழே மக்கள் என போட்டு 'எங்களை மாதிரி இளிச்சவாயன எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?' 'உண்மையை பேசுறவங்க தெய்வத்திற்கு சமம்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மையை பேசுறாங்க...' என பதிவிட்டு உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே விளம்பர யுத்தம் அதிகரித்துள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் இது எந்த அளவுக்கு போகுமோ என்ற அச்சம் நடுநிலையாளர்களிடம் ஏற்பட்டு உள்ளது.

- நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (197)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
25-பிப்-201613:59:38 IST Report Abuse

Mayilkumarமுதலில் மக்கள்தான் ஊழல் செய்கிறார்கள். இலவசம், ஓட்டுக்கு பணம் போன்றவைகளை வாங்கி அடிமையாகி பின்னால் புலம்புகிறார்கள். எனவே மக்களே விழியுங்கள். தவறு செய்தவர்களை சுட்டி காட்டி தண்டனையை புரிய வையுங்கள்

Rate this:
Srinivasan Dhakshnamoorthy - Kuala lumpur,மலேஷியா
25-பிப்-201613:54:59 IST Report Abuse

Srinivasan Dhakshnamoorthyஎன்னதான் குட்டிகரணம் போட்டாலும் திமுக அதிமுகவை நடுநிலை வாக்காளர்கள் ஆதரிக்க போவதில்லை. மாற்றத்தை உருவாக்க பாமகவை ஆதரியுங்கள்

Rate this:
Prakash JP - Chennai,இந்தியா
25-பிப்-201613:38:13 IST Report Abuse

Prakash JPதிமுகவையும் அதிமுகவையும் ஒப்புமைபடுத்தி பேசிவரும் சில அறிவாளிகளின் கவனத்துக்கு..... முந்தைய (2006-2011) திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது... இப்போதைய அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ‘மைனஸ்’ 3%... தமிழக வேளாண்மை வளர்ச்சி ‘மைனஸ்’ 12 சதவிகிதம்.... திமுக ஆட்சியில் தமிழக உற்பத்தி வளர்ச்சி 20.18% சதம்... அதிமுக ஆட்சியில் அது 1.61% சதமாக சரிவு... முந்தைய திமுக ஆட்சியின் இறுதியாண்டில் (2011) GDP எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தியானது 13.12% சதமாக இருந்தது, ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் GDP 4.14% சதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது..... இதே காலகட்டத்தில் மோடியின் குஜராத் மாநில GDP வெறும் 10% சதமாக இருந்தது...இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, "மிகவும் வளர்ந்த" குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில் இருந்தது.... திமுக ஆட்சியில் தேசிய வளர்ச்சி குறியீட்டில், பெரியமாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்தது... குஜராத், கர்நாடகா, ஆந்திரா வங்காளம், மற்றும் பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர்.. மற்றும் பிகார், உபி போன்ற எல்லாமாநிலங்களும் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு கீழே இருந்தன... திமுக ஆட்சியில் எல்லா அளவீடுகளிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்த தமிழகம், ஆனால், அதிமுக ஆட்சியில் கடைசி மூன்று இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.... முந்தைய திமுக ஆட்சியால் செயல்படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பற்றி சொல்லவே தேவையில்லை... அது திமுகவின் முத்திரை திட்டம்... அதேபோல எண்ணிலடங்கா மேம்பாலங்கள், தொழில்சாலைகள், ஒக்கனேக்கல் ராமாநாதபுரம் போன்ற பல்வேறு கூட்டுகுடிநீர் திட்டங்கள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டக்கள் குறித்தெல்லாம் தனியே சொல்லதேவையில்லை...... இப்போது தமிழகத்தில் கிடைக்கும் கூடுதல் மின்சாரம் எல்லாம், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தான்... எண்ணிலடங்கா திமுக ஆட்சியின் சாதனைகள் எங்கே... சீரழிந்த, செயல்படாத அதிமுக ஆட்சியின் வேதனைகள் எங்கே.... இரண்டையும் ஒப்பிடக்கூட முடியாது..... உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, எப்படி வெட்கம்மே இல்லாமல் திமுகவை செயல்படாத வெத்துவேட்டு அதிமுக அரசோடு ஒப்பிடுகிறார்கள்??? இவர்களுக்கு உண்மையிலேயே அரசியல் அறிவு என்பது சிறிதளவாவது உள்ளதே என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.. மேலும், மத்திய புள்ளிவிவர ஆய்வுகளின்படி, 1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் பொருளாதார சமூக வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது. 2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்வாக உள்ளது. 3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது. 4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், தலித் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோர் (entrepreneurs) மிக அதிகம் உள்ளனர். இந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திமுக ஆட்சிகாலங்களே முக்கிய காரணம்.... எனவே, எந்தவித அரசியல் அறிவும் இல்லாமல், திமுகவையும் அதிமுகவையும் ஒப்பிடவேண்டாம்...

Rate this:
Cheenu Meenu - cheenai,இந்தியா
26-பிப்-201600:37:35 IST Report Abuse

Cheenu Meenuஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் திமுகவையும் அதிமுகவையும் ஒப்பிடவேண்டாம். கலைனர் ஆட்சியில் இருந்த போது இலங்கையில் ஒன்றைலட்சம் பேரை இலங்கை ராணுவம் சுட்டுகொன்றபோது வாய் மூடி மவுனம் காத்து மத்திய அரசை தட்டி கேட்காமல், இங்கே முதல்வராக ஒட்டிக்கொண்டு இருந்தாரே ? அதை பெரிசு பண்ணாதீர்கள்...

Rate this:
மேலும் 193 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X