தேச விரோத நடவடிக்கைகளை சகிக்க முடியாது: அமித் ஷா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேச விரோத நடவடிக்கைகளை சகிக்க முடியாது: அமித் ஷா

Added : பிப் 25, 2016 | கருத்துகள் (59)
Advertisement
ராகுல், தேச விரோத நடவடிக்கைகள், சகிக்க முடியாது, அமித் ஷா

பஹ்ராய் : கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா? என காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு, அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி., மாநிலம், பஹ்ராயில் நடந்த ராஜா சுஹேல்தேவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது: இந்திய விடுதலைக்காக ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால், தற்போது நாட்டைப் பிளவுபடுத்தும் தேச விரோத கோஷம் எழுப்பிய ஜே.என்.யூ., போன்ற சக்திகளுக்கு காங்., துணைத்தலைவர் ராகுல் ஆதரவளித்து வருகிறார். ஓட்டு வங்கி அரசியலுக்காக, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுடன், அவர் கைகோர்க்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேச விரோதத்தை சகித்துக் கொள்ள வேண்டுமா? பார்லி., தாக்குல் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்புபவர்கள் தேசத் துரோகிகள் இல்லையா? ராகுலும், மற்ற எதிர்க் கட்சியினரும், பார்லிமென்டில், இதை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
25-பிப்-201618:05:41 IST Report Abuse
Balakrishnan ஒருசில அரவேக்காடு பசங்க (ராகுல், சிதம்பரம், காங்கிரஸ் அரசில் எழுத்தாளன்னு சொல்லி பரிசு வாங்கிய சில அல்லகைகள்........) பேசுறதெல்லாம் எப்போதுமே கணக்குல எடுத்து கொள்ள வேண்டாம். தாய் நாட்டுக்கு எதிரா யார் வந்தாலும் பேசினாலும் அவனோட கால் இந்த பூமில படவிடகூடாது. அமித்ஷா தேச விரோதிகளை ஒடுக்குவோம்னு சொன்னதுக்கே இந்த குதிகுதிக்குறீங்க. இவ்வளோ வீரவசனம் பேசுற நீங்க காஷ்மீர்ல அமைதியா ஏன் இருக்கமாட்டேனுரிங்க?
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
26-பிப்-201611:16:48 IST Report Abuse
nallavanஅமைதியாக இருக்க கூடாது என்பதுதானே தேச பகதர்களின் எண்ணம்.வாஜ்பேயி ஆட்சிகாலத்தில் காஷ்மீரில் RSS சிந்தனை கொண்ட கவர்னர் எப்போ போயி உட்காந்தாரோ அன்றைக்கு போன அமைதிதானே இன்னும் திரும்ப வில்லையே....
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
25-பிப்-201618:00:16 IST Report Abuse
yila தேசத் தந்தை காந்தியைக் கொலை செய்தது தேச விரோத நடவடிக்கைதான் என்பதை இப்போதாவது ஒத்துக்கொண்டாரே, இவரே ஆர் எஸ் எஸ் ன் நடவக்கைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், இனி ஆர் எஸ் எஸ் ன் நிலை என்னவாகுமோ?
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - singapore,சிங்கப்பூர்
25-பிப்-201617:01:27 IST Report Abuse
suresh kumar விடுதலை போராட்டத்தில் அமித்ஷா சார்ந்த இயக்கத்தின் ஈடுபாடு என்ன என்பதை தெளிவுபடுத்தினால் இவரின் தேசபக்தி நமக்கு புலப்படும்....இவரோ பாகிஸ்தான் பட்டாசு வெடித்து கொண்டாடும் என்றார்.....ஆனால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரடியாகவே சென்றார் இவரின் தலைவர்.....இவ்வளவு சிறந்த தேசபக்தர் ஏன் காஷ்மீரில் பிடிபி உடன் ஆட்சியை பகிர்ந்தார்.....இவரின் தேசபக்தி அனைவரும் அறிந்ததே.....இவர் பிரதமராக மனதார வாழ்த்துகிறேன்.....அவ்வளவு திறமை இவருக்கு உண்டு....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-பிப்-201621:20:38 IST Report Abuse
Nallavan Nallavanவிவேகானந்தர் கூடத்தான் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை ..... அவரைச் சந்தித்த பாரதியோ அல்லது ராஜாஜியோ (விவேகானந்தரைச் சந்தித்த பொழுது ராஜாஜி மாணவர்) அதிதீவிர சுதந்திரப் போராட்ட வீரர்கள் .... சுமார் நாற்பத்தைந்து வருடங்களாக நாம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அயோக்கியர்களாகிய நம்முடைய இன்றைய கழகங்களின் முன்னோடியான நீதிக் கட்சியினரோ ஆங்கிலேயர்களிடம் """" சுதந்திரமே கொடுக்காதீர்கள் ..... அட் லீஸ்ட் சென்னை மாகாணத்தையாவது ஆண்டுகொள்ளுங்கள் """" என்று கெஞ்சியவர்கள் ....இப்போ சொல்லுங்க .... உங்களுக்கு இந்தப் போராளிகள்தான் பிடிக்கும் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .... ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் தேச நலன் .... தேச நலன் ..... தேச நலன் ..... தேசத்துக்கு ஊரு விளைவிக்க எண்ணுபவர்கள், தேசத்தைப் பிளக்க எண்ணுபவர்கள், தேசத்தை நாசமாக்க எண்ணுபவர்கள், தேசத்தைப் பிரித்தாள எண்ணுபவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வெறுப்பார்கள் .... அந்த இயக்கத்தைக் குறை கூறுபவர்களின் யோக்யதையைப் பார்த்தாலே அந்த இயக்கத்தின் பெருமை தெரியும் .... நிழலின் அருமை வெயிலில் தெரியும் ..... கற்பூர வாசனையை அனைத்து ஜீவராசிகளும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை .... ஆகவே உங்களுக்குத் தெரியாததில் வியப்பில்லை .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X