அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து| Dinamalar

அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து

Added : பிப் 25, 2016 | கருத்துகள் (215)
Advertisement
அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து

புதுடில்லி : பார்லி., கட்டிட தாக்குதலில் ஈடுபட்டதாக அப்சல் குருவுக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இது தனிமனிதனான என்னுடைய கருத்து. இது தேசவிரோதம் ஆகாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக சிதம்பரம் பேசி உள்ள இந்த கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முந்தைய காங்., ஆட்சியின் போது 2008 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் இருந்தவர் ப.சிதம்பரம். முந்தைய காங். ஆட்சியின் போது பார்லி., தாக்குதுல் குற்றவாளி என பயங்கரவாதி அப்சல் குரு கைது செய்யப்பட்டான். அவருக்கு 2013ம் ஆண்டு, சுஷில்குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக இருந்த போது தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிதம்பரம் தற்போது அளித்துள்ள பேட்டியில் 2001ம் ஆண்டு நடந்த பார்லி., கட்டிட தாக்குதல் வழக்கு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிதம்பரம், அப்சல் குரு மீதான குற்றச்சாட்டுகளில் இருந்த சாத்தியக்கூறுகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது .அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாக இருக்கலாம். பார்லி., கட்டிட தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு உள்ளதா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. அரசு தரப்பில் என்ன தான் கூறினாலும், கோர்ட் தவறான முடிவு எடுக்கும் போது என்ன செய்ய முடியும். ஏனெனில் அப்சல் குரு அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்.ஆனால் ஒரு தனி மனிதனாக, இந்த வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அவர் பார்லி., கட்டிட தாக்குதலில் ஈடுபடவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை அவர் ஈடுபட்டிருந்தால், அவருக்கு பரோல் ஏதும் அளிக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்திருக்கலாம் என்றார்.


தேச விரோத கோஷம் தவறில்லையாம்:

டில்லி ஜவஹர்லால் நேரு மாணவர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், ஒருவர் சுதந்திரமாக பேசுவது தேசவிரோதம் ஆகாது. உங்களது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில், விஷதன்மை கொண்டதாக இருந்தால் மட்டுமே அது தேசவிரோத பேச்சாகும். மாணவர்கள் அப்படி முழக்கமிட்டார்கள் என்றால் அது அவர்களின் வயது. அந்த வயதில் தவறு, சரி தெரியாது. ஒரு பல்கலை.,யில் அடிபணிவதை நீங்கள் எப்போதும் எதிர்பார்க்க முடியாது. அது பொருத்தமற்றதாக தான் இருக்கும்.அப்சல் குருவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது எங்கள் அரசு தான் நடந்தது. ஆனால் அப்போது நான் உள்துறை அமைச்சராக இல்லை. அதனால் என்ன செய்ய வேண்டும் என என்னால் கூற முடியாது. நீங்கள் அந்த பதவியில் இருந்தால் மட்டுமே அது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்றார்.வாசகர் கருத்து (215)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
26-பிப்-201615:45:06 IST Report Abuse
Girija இதில் என்ன கொடுமை என்றால் இவர் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்தார் (Minister for Internal Security), என்பதுதான்
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
06-ஏப்-201710:00:35 IST Report Abuse
Sitaramen Varadarajanஇத்தாலி அடிமைக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்று சொல்லுங்கள். அதுதான் உண்மை. பொருத்தமாகவும் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Manian k - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201615:19:00 IST Report Abuse
Manian k அமைச்சராக இருந்த போது இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கலாமே. இம்மாதிரி ஆட்கள் எல்லாம் கல்வி செருக்கு / அதீத சுயநலம் கொண்டவர்கள். khan gress மற்றும் தேச துரோகிகளான கம்முநிஸ்ட் ஆகியவை நம் நாட்டை கெடுக்க வந்த கோடரி காம்புகள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201615:14:13 IST Report Abuse
Endrum Indian ஆகவே வேலையில்லாமல் ஒரு அரசியல்வாதியாக இருப்பது உலக மகா கஷ்டம் என்று இப்பொழுது தெரிகின்றதா? நாளை இந்தியாவின் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப் என்று ராகுல்/சோனியா உளறினாலும் அதற்கும் (காங்கிரஸ் கைக்கூலிகள்) இவர்கள் சப்பைக்கட்டு கட்டி ஆதரித்து பேசவேண்டும். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா மூச்சு வாங்குதே. முஸ்லிம்களை தவிர்த்து இங்கு கருத்து கூறியிருக்கும் (202 பேரு-முஸ்லீம்கள்) அனைவரும் என்னமா வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கின்றார்கள் சிதம்பரத்தை, இந்த கருத்தை படித்தால் அவர் ரோஹித் வேமுல போல் தற்கொலை செய்து கொள்வார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X