வழங்குபவர் ஜெயலலிதா பறிப்பவர் கருணாநிதி அமைச்சர் காட்டம்

Added : பிப் 28, 2016 | |
Advertisement
திண்டுக்கல்:"ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பழக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் ஏழைகளிடம் பறித்து பழக்கப்பட்டவர்கள்' என, திண்டுக்கல்லில் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.திண்டுக்கல்லில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: ஜெயலலிதா

திண்டுக்கல்:"ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பழக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் ஏழைகளிடம் பறித்து பழக்கப்பட்டவர்கள்' என, திண்டுக்கல்லில் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.திண்டுக்கல்லில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: ஜெயலலிதா நலத்திட்டங்கள் பலவற்றை வழங்கி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பயன் பெறாதவர் யாரும் இருக்க முடியாது. அதே நேரம் கருணாநிதியும், ஸ்டாலினும் ஏழை மக்களிடம் பறித்து பழக்கப்பட்டவர்கள். 24 மணிநேரமும் மக்களை பற்றி சிந்திப்பவர் ஜெ.,தான். அவர் ஆட்சியின் நன்மைகளை ஒரு நிமிடம் நினைத்து பார்த்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி தொடர ஆதரவு அளிக்க வேண்டும், என்றார். விழாவில் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.பி., சீனிவாசன், நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், ஆவின் தலைவர் திவான்பாட்சா, மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பழனிச்சாமி பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X