தமிழகத்தில் கோமாரி தடுப்பூசி கால்நடைத்துறை ஏற்பாடு| Dinamalar

தமிழகத்தில் கோமாரி தடுப்பூசி கால்நடைத்துறை ஏற்பாடு

Added : பிப் 28, 2016 | |
விருதுநகர் : தமிழகத்தில் கால்நடைத்துறை சார்பில், 95 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், மாடுகளின் வாய், கால் போன்றவற்றை தாக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தன்மை தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படும். இந்நோய் பரவாமல் தடுக்க தேசிய கால், வாய் கோமாரி நோய்

விருதுநகர் : தமிழகத்தில் கால்நடைத்துறை சார்பில், 95 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், மாடுகளின் வாய், கால் போன்றவற்றை தாக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தன்மை தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படும். இந்நோய் பரவாமல் தடுக்க தேசிய கால், வாய் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், 2011ம் ஆண்டு முதல் இது வரை, ஒன்பது முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, 10 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச், 1 முதல் 21 வரை நடக்கிறது. தமிழகத்தில், 95 லட்சம் கால் நடைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி கிராமங்களில் முகாம்கள் நடத்தவதற்கான ஏற்பாடுகளில் கால்நடைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X