பள்ளி, கல்லூரி செய்திகள்( விருதுநகர் )

Added : பிப் 28, 2016 | |
Advertisement
வேலை வாய்ப்பு முகாம்விருதுநகர்:விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பி.இ., பி.டெக், மாணவர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை இ.கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடத்திய முகாமில் மாணவி அட்லினா வரவேற்றார். முதல்வர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தலைமை வகித்தார்.

வேலை வாய்ப்பு முகாம்
விருதுநகர்:விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பி.இ., பி.டெக், மாணவர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை இ.கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடத்திய முகாமில் மாணவி அட்லினா வரவேற்றார். முதல்வர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தலைமை வகித்தார். இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரி துணைத் தலைவர் வெங்கடேஷ் வாழ்த்தினார். இ.கேர் நிறுவன மனித வள மேலாளர் ஈஸ்வர் பேசினார்.
கல்லூரியில் வளாக தேர்வு
வெம்பக்கோட்டை:சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னை பேரகான் டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. கல்லூரி தலைவர் கேசவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். முதல்வர் இளங்குமரன் வரவேற்றார். நிறுவன மனிதவளத் துறை அதிகாரிகள் பிரவீன் ஐசக், செந்தில்குமார் மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். தேர்வான மாணவர்களுக்கு தாளாளர் பிருந்தா பணி நியமன ஆணையை வழங்கினார்.
பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கம்
விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் "பல்லுயிர் பாதுகாப்பு' எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.துறை தலைவர் சண்முகவேல் வரவேற்றார். செயலாளர் மதன் தலைமை வகித்தார். மதுரை காமராசர் பல்கலை பிணி காப்பியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் , முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் அசோக்குமார், காந்தி கிராம பல்கலை உயிரியல் துறை பேராசிரியர் ஆர்.ராமசுப்பு, சுற்றுச்சூழல் விஞ்ஞானி சேராயல் உ<ட்பட பலர்பேசினர். பேராசிரியர் டேவிட்பென்ஹர் நன்றி கூறினார்.
பயிற்சி வகுப்பு
சிவகாசி:சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பன்முக ஊடக ங்களைக் கையாளும் திறன் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது. உதவிப்பேராசிரியர் பசு பதி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் திருமுருகன் வரவேற்றார். இளங்கலை இரண்டாமாண்டு மாணவி ஜெபாகிரேஸி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தங்கமணி, சுபத்ரபாண்டி செய்தனர்.
கல்லூரியில் கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்:கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் சிவில்துறை கருத்தரங்கு நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார்.புதுதில்லி பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சிதுறை விஞ்ஞானி பாலாஜி, சிவில்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். முதலாண்டு துறைத்தலைவர் செல்வகுமார் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியை தாமரை நன்றி கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X