பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத சுற்று சூழல் பூங்கா அதிகாரிகள் பராமுகத்தால் வீணாகுது

Added : பிப் 28, 2016
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சுற்று சூழல் பூங்கா பராமரிப்பின்றி புதர்கள் மண்டி படுமோசமான நிலையில் காட்சி தருகிறது.விருதுநகர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வனத்துறை, சமூக வனத்துறை, மாசுகட்டுப்பாடு துறையினர் இணைந்து கடந்த 2004 மார்ச்சில் சுற்று சூழல் பூங்காவை அமைத்து திறந்து

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சுற்று சூழல் பூங்கா பராமரிப்பின்றி புதர்கள் மண்டி படுமோசமான நிலையில் காட்சி தருகிறது.விருதுநகர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வனத்துறை, சமூக வனத்துறை, மாசுகட்டுப்பாடு துறையினர் இணைந்து கடந்த 2004 மார்ச்சில் சுற்று சூழல் பூங்காவை அமைத்து திறந்து விடப்பட்டது.
கருவேல மரங்கள்:இதில் பல்வேறு மரங்கள், செயற்கை நீரூற்றுகள், மாவட்டத்தின் முக்கிய இடங்களில் உள் தொழில்கள் பற்றிய அறிவிப்புகளும் வைக்கப்பட்டன. முறையாக பராமரிக்காமல் விட்டதால் கருவேல மரங்கள் நிறைந்து, வேலிகள் பெயர்ந்து, செயற்கை நீருற்று பயன்படுத்த முடியாது ஓரிரு ஆண்டுகளிலே சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ளது.
இயற்கை ஆர்வலர்கள்:மேலும் இங்கு தண்ணீருக்காக போடப்பட்ட போர்வெல்கள் மற்றும் சோலார் மின் விளக்குகள் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு படுமோசமான நிலையில் காட்சி தருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலே சமூக வனத்துறை, மாசு கட்டுப்பாடு அலுவலகம் இருந்தும் பராமரிப்பற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்காவை பராமரிக்காமல் விடப்பட்டது இயற்கை ஆர்வலர்களுக்கு வேதனையை தருகிறது .
மூலிகை செடி: இப்பூங்காவை பராமரித்து மரங்கள், வன விலங்குகள், சுற்று சூழல்களை மாசுபடாமல் வைத்திருப்பதின் அவசியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் புகைபடங்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிற்பங்களை இடம்பெற செய்து, தற்போது நிற்கும் மரங்களோடு மேலும் அரிய வகை மூலிகை செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கலெக்டர் அலுவலக வளாக பூங்காவை, முறைப்படி செயல்படுத்தினால் இங்கு வருவோர் இதை கண்டு பயனடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X