ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டர் டூரிசம் ரெடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்திற்கு 'ஹெலிகாப்டர் டூரிசம்' ரெடி

Added : பிப் 28, 2016 | கருத்துகள் (1)
Share
ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ஹெலிகாப்டர் டூரிசத்திற்காக ஹெலிபேடு, அலுவலக இடம் தேர்வு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தமிழகம், சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடத்தில் உள்ளது. 2014 ல் தமிழகத்திற்கு, 32.75 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 46.58 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். மேலும் அவர்களின் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை, ஹெலிகாப்டர் டூரிசத்தை அறிவித்தது.

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ஹெலிகாப்டர் டூரிசத்திற்காக ஹெலிபேடு, அலுவலக இடம் தேர்வு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தமிழகம், சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடத்தில் உள்ளது. 2014 ல் தமிழகத்திற்கு, 32.75 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 46.58 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். மேலும் அவர்களின் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை, ஹெலிகாப்டர் டூரிசத்தை அறிவித்தது. முதற்கட்டமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து தனியார் உதவியுடன் ராமேஸ்வரம், கொடைக்கானல், கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மூன்று இடங்களில் ஹெலிபேடு, டிக்கெட் வழங்கும் அலுவலகம் அமைக்க நிலம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ராமேஸ்வரத்திற்கு மண்டபம் முகாமில், ஏற்கனவே உள்ள ஹெலிபேடை பயன்படுத்தி கொள்ள தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து அரசுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும் என, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X