ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம்

Added : பிப் 29, 2016
Advertisement

புதுடில்லி:ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.
இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு உதவி?* துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது. * 'துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ' என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.* இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X