பொது செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., அளித்த பட்டியலை விட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்'

Added : மார் 01, 2016
Advertisement
நீக்கம்

சென்னை:'தி.மு.க., சார்பில், போலி வாக்காளர் என, 2.19 லட்சம் பெயர்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. அதை விட கூடுதல் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன' என்று, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
இது குறித்து, ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது:தி.மு.க., சார்பில், 51 சட்டசபை தொகுதிகளில், நீக்கப்பட வேண்டிய வாக்காளர்கள் என, 2.19 லட்சம் பேரின் பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன்படி, ஆள் இல்லாத வாக்காளர்கள், 2,686; இறந்த வாக்காளர்கள், 65 ஆயிரத்து, 727; ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், 37 ஆயிரத்து, 241; இடம் மாறி சென்றவர்கள், 1.09 லட்சம். இப்பட்டியலில் உள்ள பெயர்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டது. இது தவிர, தேர்தல் கமிஷன் சார்பில், நீக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இப்பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. ஆட்சேபனை எதுவும் இல்லாததால், 6.50 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட உள்ளது. நேற்று முன்தினம், தி.மு.க., சார்பில், திருச்செங்கோடு, பரமத்திவேலுார், குமாரபாளையம், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில், 8,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக, பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.இனி மேல் நீக்கப்பட வேண்டியவர் பட்டியல் கொடுத்தால், அவை தனி பட்டியலாக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பார்வையிடலாம்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், இரண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், பெயர் சேர்க்க கோரி, ஏழு லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.
அவற்றை, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி, அடுத்த, 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். கல்லுாரி மாணவ, மாணவியர் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 35 ஆயிரம் மாணவ, மாணவியர், வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா':சட்டசபை தேர்தலுக்காக, 63 ஆயிரத்து, 246 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், 28 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட உள்ளது. 10 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், 'வீடியோ கேமரா' மூலம், அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X