பொது செய்தி

தமிழ்நாடு

'காமெடி' நடிகர் குமரிமுத்து மரணம்

Added : மார் 01, 2016 | கருத்துகள் (5)
Share
Advertisement
மூச்சுத் திணறல் காரணமாக, சிகிச்சை பெற்று வந்த, 'காமெடி' நடிகர் குமரிமுத்து, நேற்று காலை மரணம்அடைந்தார்.சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் குமரிமுத்து, 77; முள்ளும் மலரும், இது நம்ம ஆளு உள்ளிட்ட, 900க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு படங்களில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த
குமரிமுத்து மரணம்

மூச்சுத் திணறல் காரணமாக, சிகிச்சை பெற்று வந்த, 'காமெடி' நடிகர் குமரிமுத்து, நேற்று காலை மரணம்அடைந்தார்.சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் குமரிமுத்து, 77; முள்ளும் மலரும், இது நம்ம ஆளு உள்ளிட்ட, 900க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு படங்களில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த குமரிமுத்து, நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் பிரச்னை எழுப்பி, அதனால், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
சமீபத்தில், தேர்வான புதிய நிர்வாகிகள், குமரிமுத்துவை சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக சேர்த்தனர். சென்னை, நந்தனம், டர்ன்புள்ஸ் சாலையில் வசித்து வந்த அவர், கடந்த, மூன்று மாதங்களாக மூச்சுத் திணறல் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
குமரிமுத்துவுக்கு, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்; இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. குமரிமுத்துவின் மறைவுக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-மார்-201601:26:53 IST Report Abuse
மலரின் மகள் இவர் தலை சிறந்த குணா சித்திர நடிகர். YG மகேந்திரன் மற்றும் டெல்லி கணேசை போல திரையுலகம் இவரை காமடி நடிகராக மாற்ற முயற்சித்து, இவரின் திறமை பெரிதளவில் வெளிப்படுத்தப்படாமலும், இவரை சரியாக பயன் படுத்திக்கொள்ளாமலும் விட்டு விட்டார்கள். மிகச்சிறந்த நாடக நடிகரும் கூட. கிராமத்து கதா பாத்திரங்களில் இவர் அசத்ததாதா அசத்தல்களே இல்லை எனலாம். நம்மை சிரிக்க வைத்த குணசித்திர நடிகர். இவரின் இறப்பு சற்றே எதிர் பார்க்காத ஒன்று எனக்கு. நிச்சயம் நல்லுலகம் செல்வார்
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
01-மார்-201610:31:26 IST Report Abuse
JeevaKiran அண்ணாரது ஆத்தம சாந்தியடையட்டும்
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
01-மார்-201609:14:40 IST Report Abuse
Amirthalingam Sinniah ஆத்துமா இறைவனுடன் சங்கமமாக பிரார்த்திப்போம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X