மூச்சுத் திணறல் காரணமாக, சிகிச்சை பெற்று வந்த, 'காமெடி' நடிகர் குமரிமுத்து, நேற்று காலை மரணம்அடைந்தார்.சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் குமரிமுத்து, 77; முள்ளும் மலரும், இது நம்ம ஆளு உள்ளிட்ட, 900க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு படங்களில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த குமரிமுத்து, நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் பிரச்னை எழுப்பி, அதனால், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
சமீபத்தில், தேர்வான புதிய நிர்வாகிகள், குமரிமுத்துவை சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக சேர்த்தனர். சென்னை, நந்தனம், டர்ன்புள்ஸ் சாலையில் வசித்து வந்த அவர், கடந்த, மூன்று மாதங்களாக மூச்சுத் திணறல் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
குமரிமுத்துவுக்கு, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்; இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. குமரிமுத்துவின் மறைவுக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE