மேல்மருவத்துார்;மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழாவையொட்டி, கலச விளக்கு வேள்வி பூஜை நேற்று நடைபெற்றது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 76வது பிறந்த நாள் விழா நேற்று காலை துவங்கியது. அதிகாலை, 3:00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கிய விழாவில், 3:15க்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது; 9:15க்கு பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
தொடர்ந்து, டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, ஆன்மிக ஜோதியை, ஆதிபராசக்தி இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாலை, 5:00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, இன்று காலை, 8:00 மணிக்கு, பங்காரு அடிகளாரை, வெள்ளி ரதத்தில், பக்தர்கள் அழைத்து வருகின்றனர். மாலை, 5:00 மணிக்கு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்
களின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.நாளை மாலை, 5:00 மணிக்கு, மக்கள் நலப்பணி மற்றும் விழா மலர் வெளியீட்டு விழாவில், வருமான வரித்துறை இணை ஆணையர் ஜெயராகவன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தணிகாசலம், நேஷனல் ஆர்க்கனைஷேசன் செயலர் பசுவராஜ் பாட்டீல் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். வரும், 3ம் தேதி, பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், சேலம், நாமக்கல் மாவட்ட ஆதிபராசக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.