ராமநாதபுரம்: டீசல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 21 மாத பா.ஜ., ஆட்சியில் 20க்கும் மேற்பட்ட முறை பெட் ரோல், டீசல் விலை குறைக்கப் பட்டது. மாதம் இரு முறை பெட் ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. தற் போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையால் அத்தியாவசிய பொருட் களின் விலை <உயரும். மானிய விலை டீசலில் கடலுக்குச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு மாதத் திற்கு ரூ.5 ஆயிரம், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதத்திற்கு ரூ.ஆயிரம் கூடுதல் செலவு ஏற்படும். இதனால் தினக்கூலி குறையக்கூடும் என மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் பெரி.பாலசுப்ர மணியன் கூறுகையில்,"" கச்சா எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை கணிசமாக குறைந்து வருகிறது. எண்ணெய் நிறு வனங்கள் முழு அளவில் விலையை குறைக்காமல் சம்பிரதாயத்திற்காக 60 காசு, 40 காசு என பெட்ரோல், டீசல் விலையை குறைக்கின்றன. இன்று(மார்ச் 1) முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 <உயர்த்தியதால் மீனவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தபட்ட டீசல் மானியத்தை எதிர்பார்த்த மீனவர்களுக்கு விலை உயர்வு வேதனை அளிக்கிறது, என்றார்.