சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல்

Added : மார் 02, 2016
Advertisement

திருவனந்தபுரம்: 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சூர் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி சால்வேஷன்ஆர்மி சர்ச் பாஸ்டர் கே. ஜெயிம்ஸ் 37. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார். பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது. இந்நிலையில் 12 வயது மாணவி ஒருவர் தனது ஆசிரியையிடம் பாஸ்டரின் லீலைகளை கூறியுள்ளார். அவர் இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தார். மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது மேலும் ஒரு மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், 2015 பிப்ரவரியில்தான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய திருச்சூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கே.பி.சுதீர், பாஸ்டருக்கு 40 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் மாநில அரசு குழந்தையின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X