தமிழ்நாடு

காட்டு பன்றிகளை விரட்டும் இயற்கை திரவ குடுவை

Added : மார் 02, 2016
Share
Advertisement
வாலாஜாபாத் : நெல், கரும்பு போன்ற பயிர்களை நாசப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை, வயலுக்குள் வராமல் தடுப்பதற்கு, வேளாண் அறிவியல் ஆராய்சி நிறுவனம், 'பன்றி விரட்டி' மருந்தை கண்டு பிடித்து, விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், குன்றத்துார் உள்ளிட்ட பல ஒன்றியங்களில், நெல், கரும்பு, வேர்கடலை ஆகிய பயிர்கள் அதிக அளவில்,

வாலாஜாபாத் : நெல், கரும்பு போன்ற பயிர்களை நாசப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை, வயலுக்குள் வராமல் தடுப்பதற்கு, வேளாண் அறிவியல் ஆராய்சி நிறுவனம், 'பன்றி விரட்டி' மருந்தை கண்டு பிடித்து, விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், குன்றத்துார் உள்ளிட்ட பல ஒன்றியங்களில், நெல், கரும்பு, வேர்கடலை ஆகிய பயிர்கள் அதிக அளவில், விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். ஏரிகள், மலைகள், காடுகளை ஒட்டி இருக்கும் வயல் வெளிகளில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதை தடுக்க கோரி, விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும், எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதை தவிர்க்க, வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பன்றி விரட்டி இயற்கை திரவத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த இயற்கை திரவ மருந்தை கையாளுவதற்கு, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இந்த தடுப்பு முறையால், விவசாயிகள் பயிர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தான் தடுப்பு முறை!● பயிரிடப்பட்டுள்ள நிலத்தை சுற்றிலும், ஒன்றரை அடி உயரத்தில், 3 அடி உயர கம்பில், கம்பியை கட்ட வேண்டும் ● அதில், 3 மீட்டர் இடைவெளியில், ஒரு பன்றி விரட்டி திரவம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய டப்பாவை இரு புறமும் துளை போட்டு, கம்பி நுனியில் கட்ட வேண்டும்● குறைந்தது, 1 ஏக்கருக்கு, 90 சிறிய டப்பாக்கள் தேவைப்படும்
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஒருவர், காட்டு பன்றிகளை விரட்டும் முறை குறித்து தெரிவித்தார். அவரிடம் ஆலோசனை பெற்று, என் வயலில் தடுப்பு முறையை கையாண்டு உள்ளேன். இப்போது, காட்டு பன்றிகள் தொல்லை இல்லை. -க.கிருஷ்ணன், கோவிந்தவாடி அகரம்
காட்டு பன்றிகளுக்கு நுகரும் தன்மை அதிகம். அவைகளுக்கு ஒவ்வாத வாடையுடன், இயற்கை திரவ மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதை, விவசாயிகளுக்கு அளித்து உள்ளோம். விவசாயிகளும் தடுப்பு முறை வெற்றிகரமாக உள்ளது என, தெரிவிக்கின்றனர். -பாண்டியன், விரிஞ்சிபுரம் அறிவியல் ஆராய்சி நிலையஉதவி பேராசிரியர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X