பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., - கருணாநிதி
பிரசாரத்திற்கு தயாராகும் சொகுசு வேன்கள்

அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசார சொகுசு வாகனங்கள், கோவையில் தயாராகி வருகின்றன.

ஜெ.,கருணாநிதி பிரசாரம்,சொகுசு வேன்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கோவை, சிவானந்தா

காலனியிலுள்ள தனியார் நிறுவனத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய, பிரசார சொகுசு வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஜெ.,,வுக்கு, டி.என்.22, ஜெ 1415 என்ற பதிவெண் கொண்ட, 12 பேர்பயணிக்கும் வகையில், 'போர்ஸ்' நிறுவன வாகனம், முழு வீச்சில் தயாராகிறது. முன்புற இருக்கைகள் சுழலும் வகையிலும், மேலும், கீழும் இயங்கும் வகையிலும், 'ஹைட்ராலிக் லிப்ட்' பொருத்தப்பட்டுஉள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'போர்ஸ்' நிறுவன வாகனம் தயாராகி வருகிறது; 'சக்கர நாற்காலியை எளிதாக ஏற்றி,இறக்கவும், 26 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதனப் பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி,

Advertisement

'ஏசி', எல்.இ.டி., 'டிவி', வெஸ்டன் டைப் கழிவறை, குளியலறை, நீர் சேமிப்பு தொட்டி என, பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.
ஸ்டாலின், கனிமொழி, காங்., இளங்கோவன் உட்பட தலைவர்களுக்கும், இதுபோல் பல அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-மார்-201618:12:19 IST Report Abuse

வெகுளிதி.மு.க., தலைவர் வண்டிக்கு எல்லா வசதியும் ஒகேதான்..... சிகையலங்கார அலமாரிதான் இடிக்குது....அத அம்மாஜி வண்டிக்கு மாத்துங்க....

Rate this:
K.R.Sekar - Chennai,இந்தியா
05-மார்-201601:01:57 IST Report Abuse

K.R.Sekarதவறாக புரிந்துகொண்டீர், அவரை பார்த்துக்கொள்ள துணைவியார் அவருடன் செல்ல நேரிடலாம். சமயத்தில் மகள் கூட வருவதற்கான சந்தர்பங்கள் உண்டு. மேக்கப் என்பது தலை மட்டும் அல்ல. aadaikalumthaan...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மார்-201616:48:11 IST Report Abuse

தமிழ்வேல் சென்ற தேர்தலுக்கு தயாரான வண்டிகள் எல்லாம் காயலான் கடையிலே இருக்கா ? ஆந்திராவுக்கு வித்தாச்சா ?

Rate this:
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
04-மார்-201615:57:48 IST Report Abuse

Unmai vilambi இந்தவசதி ரொம்ப ரொம்ப கம்மிதான்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X