பொது செய்தி

இந்தியா

மகாராஷ்டிராவில் 3,228 விவசாயிகள் தற்கொலை: கடந்த 14 ஆண்டுகளில் அதிகம்

Added : மார் 04, 2016 | கருத்துகள் (11)
Advertisement
மகாராஷ்டிரா,  விவசாயிகள் தற்கொலை, Maharashtra ,farmer suicides

புதுடில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு 3,228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், கடந்த 14 ஆண்டுகளில் இது அதிகம் என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில், கடந்த 2001ம் ஆண்டில் இருந்து தற்கொலை செய்தவர்களை விட கடந்த ஆண்டு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்கொலை செய்தவர்களில் அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் 1,130 பேர், அமராவதியில் 1,179 பேர், நாசிக்கில் 4,590 பேர், நாக்பூரில் 362 பேர், கொங்கனில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3, 228 வழக்குகளில், 1,841 பேர் கடன் வாங்குவதற்கு தகுதியானவர்கள். 903 பேர் தகுதியற்றவர்கள். 484 பேர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில், 1,818 பேரின் வாரிசுகளுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் வறட்சியை சமாளிக்க மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.3,049.36 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வறட்சியை சமாளிக்க மாநில அரசு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்காக மத்திய அரசு மண் பரிசோதனை நிலையம், இயற்கை விவசாயம், சாகுபடி மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனக்கூறினார்.

*மகாராஷ்டிரா மாநில அரசு பலிராஜ் சேத்னா அபியான் திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து வருடம் தோறும் ரூ.10 கோடி ஒதுக்கி வருகிறது. இந்த குழு, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில், விழிப்புணர்வு பிரசாரம், மறுவாழ்வு, உடல்நிலை கவுன்சிலிங்,போன்றவற்றை செய்து வருகிறது.
*கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் செயல்படும் குழு, ரூ. 1லட்சம் ஒதுக்கி, விவசாயிகள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், தவணை கட்டுதல் போன்றவற்றை சரி செய்து வருகிறது.
*மாநில அரசு வசந்தராவ் நாயக் ஷேதி சுவாவ்லம்பான் மிஷன் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தற்கொலையை தடுக்க பல திட்டங்களை செயல்படுத்துகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
05-மார்-201617:55:07 IST Report Abuse
M.Guna Sekaran இந்தியாவின் சட்டம் அப்படி தான் , 1,2 எக்கர் நிலம் இருக்கும் ஏழை விவசாயிக்கும் எவனும் எந்த வங்கியும் விவசாயிகளுக்கும் கடன் தர மாட்டேன்குது ,அப்படி குடுத்தாலும் குறுகிய காலத்தில் வசூலிக்கின்றன ,அப்படி கடன் திருப்பி தர தாமதம் ஆனால் கோர்ட் மூலம் சப்தி செய்கின்றனர் , ஆனால் பணக்காரன் என்றால் நிலம் இல்லாமலே விவசாய கடன் கோடி கோடியா கொடுக்கின்றனர், இது தான் இந்தியாவில் காலகாலமா நடக்கும் செயல் .இதை யாரு யாரிடம் கேட்பது .
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
05-மார்-201612:05:59 IST Report Abuse
Selvaraj Thiroomal மேக் இன் இந்தியா திட்டத்தில் மகாராஷ்ட்ராவுக்கு 8 லட்சம் கோடி முதலீடு வரப்போவதாக பட்நாவிஸ் அறிவித்துள்ளாரே. இருப்பவர்களை காப்பாற்றாமல், புதியவர்களை ஊக்குவிப்பதை சிலகாலம் தள்ளி போடலாம். இவர்களை காப்பாற்றவே அந்நிய முதலீடு தேவைப்படும் அளவிற்கு மஹாராஷ்டிரா சென்றுவிட்டதா??? உடனடியாக பிரச்னைக்குரிய மாவட்டங்களில் நேரடி பணஉதவியை செய்து விழிப்புணர்வையும் நம்பிக்கையும் ஏற்படுத்தவேண்டும். இப்படி செய்வதும் ஒரு முதலீடுதான்,,, நெடுநாள் பயனளிக்கும் செயலுக்கு முதல்படியாகும்.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
05-மார்-201608:36:29 IST Report Abuse
yaaro 2 வருஷம் தொடர் குறை மழை. இந்த வருஷமாவது நிறை ஆகட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X