அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
'விஜயகாந்தை பேசி முடிங்க'
கனிமொழிக்கு கருணாநிதி உத்தரவு

தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்தை கொண்டு வருவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டாலும், இன்னும் தொகுதி எண்ணிக்கை முடிவடையாததால், கூட்டணியை சுமுகமாக பேசி முடிக்கும் பணியை, கனிமொழியிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த், கனிமொழி, கருணாநிதி உத்தரவு

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை, தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, தான் எடுத்திருக்கும்

முடிவு குறித்து ஏற்கனவே, தி.மு.க., தரப்பில் தன்னை சந்தித்த கனிமொழி ஆதரவாளரான அரசியல் ஆலோசகரிடம், விஜயகாந்த் தெரிவித்து விட்டார். ஆனாலும், அவர் பா.ஜ., தரப்பினரிடமும், மக்கள் நல கூட்டணியினரிடமும்கூட்டணி பேசுவது போல பேசி வந்ததும், தி.மு.க., தரப்பிலேயே இருக்கும் ஒரு சிலர், கருணாநிதியின் அனுமதி இல்லாமல், விஜயகாந்த் தரப்பை அணுகி கூட்டணி குறித்து பேசினர். ஆனால், அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகுதான், மாறன் சகோதரர்கள் களம் இறங்கினர். அவர்களிடம் சில விஷயங்களில் சாதகமான கருத்தை தெரிவித்த விஜயகாந்த், கூட்டணியை இறுதி செய்யவில்லை.

இதனால்,கனிமொழியை அழைத்த கருணாநிதி, விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பேசி முடிக்குமாறு கூறி இருக்கிறார். அதன் அடிப்படையில், கனிமொழியின் ஆதரவாளரான அரசியல் விமர்சகர் மீண்டும் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். ஆதரவாளரான அரசியல் விமர்சகர் மீண்டும்

Advertisement

விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். 'அடுத்தடுத்த கட்டங்களில் பேசி முடித்துக் கொள்ளலாம்' என உறுதி அளித்த விஜயகாந்த், 'ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள, நான் கேட்கும், 59 தொகுதிகளை, விட்டுக் கொடுக்க வேண்டும்' என சொல்ல, அடுத்த சந்திப்பில் பேசி முடித்துக் கொள்ளலாம் என, இரண்டு தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (190)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayaraghavan Tirumalairajan - chennai,இந்தியா
05-மார்-201623:32:38 IST Report Abuse

Vijayaraghavan Tirumalairajanவிஜயகாந்த் வேறு விதமாக முடிவெடுக்கும் பட்சத்தில் அவரது மாவட்ட செயலாளர்கள் விருப்பதிற்கு மாறாக இருக்கும் எனில் அந்த செயலாளர்கள் அவர்கள் கூறிய கட்சிக்கு மாற வாய்ப்பு உள்ளது.இதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு விதத்தில் அவர் மனைவியார் இரு கட்சிகளையும் விமர்சித்தது ஒரு நடுநிலை மாற்றத்தை நோக்கி செல்வதாக நினைத்தார்கள் அதுவும் கேள்விக்குறியாகும்.

Rate this:
adalarasan - chennai,இந்தியா
05-மார்-201622:48:05 IST Report Abuse

adalarasanசீக்கிரமா பேரம் பேசி வளைச்சு போட்டுங்க. எப்படியாவது நாம் பதவிக்கு வர வேண்டும். கடைசி வாய்ப்பு என்கிறார்?

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-மார்-201619:21:07 IST Report Abuse

மலரின் மகள்அப்படியே நம்ம ராகுல் ஜிக்கும் பேசி முடிங்கய்யா, அவருக்குதான் இப்ப கால் கட்டு அவசியம்

Rate this:
மேலும் 187 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X