சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு முட்டை தராம 'ஆட்டை'யை போடும் ஊழியர்கள்

Added : மார் 07, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement

அருப்புக்கோட்டை:மாணவர்களுக்கு சத்துணவுடன், இரண்டு முட்டைகள் வழங்க அரசு கொடுத்தவை, அருப்புக்கோட்டையில், கோழிக்கறி கடைகளில் இலவசமாக அளிக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், ஒரு சில கோழிக்கறி கடைகளில் கறி வாங்கினால், இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம், 1 கிலோ கோழிக்கறிக்கு, 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது.
நேற்று, 1 கிலோ கோழிக்கறிக்கு, இரண்டு முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இவை, அரசு சத்துணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அளிக்கப்பட்டவை. இது எப்படி கடைக்கு வந்தது என, கறி வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரித்ததில், வெளி மார்க்கெட்டில், 1 முட்டை, 4 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சத்துணவிற்கு வழங்கப்படும் முட்டைகளை சத்துணவு ஊழியர்களே, கடைக்காரர்களுக்கு, 1 முட்டை, 2.50 ரூபாய்க்கு விற்பது தெரிய வந்தது.
குழந்தைகளுக்கு முட்டை போடக் கொடுத்தா, அதை ஆட்டையைப் போடுறது நியாயமா என, கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-மார்-201602:47:16 IST Report Abuse
தமிழ்வேல் நாடு திருந்தாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X