சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் சுருட்டல்

Added : மார் 07, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement

வில்லியனுா:புதுச்சேரி மின்துறை பொறியாளர் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, நுாதன முறையில் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனுாரை சேர்ந்த அருணகிரிநாதன், புதுச்சேரி மின்துறையில், இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, 6:30 மணியளவில், வாக்கிங் சென்றபோது, திடீர் என அவரது மொபைல்போனுக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர், தான் ஸ்டேட் பாங்க் சென்னை மண்டல மேலாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின், தங்களின் ஆதார் எண் இல்லாததால் ஏ.டி.எம்., கார்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து ஏ.டி.எம்., சேவை வேண்டும் என்றால் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
இதை நம்பிய அருணகிரிநாதன், வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில், மீண்டும் அதே நபர் மொபைல்போனில் தொடர்பு கொண்டவரிடம், ஆதார் எண்ணை கொடுத்துள்ளார்.அப்போது, மொபைல் லைனை துண்டிக்காமல், தொடர்ந்து ஏ.டி.எம்., கார்டில் உள்ள 14 வரிசை தொடர் எண், ஏ.டி.எம்., பின் எண் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதையும் அருணகிரிநாதன் கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து, 'உங்களது ஏ.டி.எம்., கார்டு சரிசெய்யப்பட்டு விட்டது. அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று, சரிபார்த்துக் கொள்ளலாம்' என, கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதன்படி, சிறிது நேரத்தில் வில்லியனுாரில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணம், 59 ஆயிரம் ரூபாயும் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அருணகிரிநாதன், வில்லியனுார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
07-மார்-201603:32:16 IST Report Abuse
கதிரழகன், SSLC கேக்கிறவன் கேனையினா, கே ஆர் விஜயாவுக்கு நெத்தியில கொண்டைன்னு சொல்லுவாக. இவிங்களுக்கு புத்தி எங்க போச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X