கேரள நாட்டிளம் நாயகி| Dinamalar

கேரள நாட்டிளம் நாயகி

Added : மார் 07, 2016 | கருத்துகள் (5) | |
கயல் கொஞ்சும் கண்கள்... மையல் கொள்ள வைக்கும் மந்திரப்புன்னகை... பளபளக்கும் பலாச்சுளையின் நிறமுமாய் தமிழகத்து ரசிகர்களை வசியம் செய்கிறார் கேரளத்து செல்லக்கிளி காயத்ரி மயூரா.வெள்ளித் திரை, சின்னத்திரை மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த இளம்புயல் தற்போது 'களத்துவீடு' நாடகத்தில் நடித்து வருகிறார். அழகான காலைப்பொழுதில் அழகான
கேரள நாட்டிளம் நாயகி

கயல் கொஞ்சும் கண்கள்... மையல் கொள்ள வைக்கும் மந்திரப்புன்னகை... பளபளக்கும் பலாச்சுளையின் நிறமுமாய் தமிழகத்து ரசிகர்களை வசியம் செய்கிறார் கேரளத்து செல்லக்கிளி காயத்ரி மயூரா.வெள்ளித் திரை, சின்னத்திரை மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த இளம்புயல் தற்போது 'களத்துவீடு' நாடகத்தில் நடித்து வருகிறார். அழகான காலைப்பொழுதில் அழகான மயூராவிடம் 'தினமலர்' பகுதிக்கான ஒரு நேர்காணல்...* பிறப்பும், வளர்ப்பும்...கேரளா திருவனந்தபுரம் தான். தாய், தந்தை, தங்கை, பாட்டி என அழகான சின்ன குடும்பம். அங்குள்ள மதர் தெரசா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். படிச்சுட்டே நடிக்கறதும் செம 'த்ரில்' தான்.* முதல் சினிமா வாய்ப்பு?பெங்களூருவில் விளையாட்டா ஒரு போட்டோ 'ஷூட்' பண்ணினேன். அந்த போட்டோ எப்படியோ சென்னைக்கு வந்து 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' சினிமா வாய்ப்பை பெற்று தந்தது. சினிமாவில் ஒரு ஹீரோயினா வரணும்ங்ற ஆசை சின்ன வயசுலேயே இருந்தது. தேடி வந்த வாய்ப்பை விட முடியுமா.* சீரியலும், சினிமாவும் எப்படி சாத்தியம்...ஆர்ட்டிஸ்ட்டை பொறுத்தவரை சினிமாவும், சீரியலும் ஒண்ணு தான். வெளியில இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அது வித்தியாசமா தெரியும். சினிமாவில் அதிகமாகவும், சீரியலில் குறைவாகவும் நடிக்கப் போறதில்லை. இரண்டிலும் 'பெர்பாமன்ஸ்' ஒண்ணுதான். சம்பளத்தில் மட்டும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும் .* இனி சீரியல் தானா?'களத்து வீடு' தான் என்னுடைய முதலும், கடைசியுமான சீரியல். என்னோட இரண்டாவது படம் 'சூறையாடல்'. தற்போது மலையாளத்தில் ஒரு படம் பண்ணிருக்கேன். அது இந்த மாதம் 'ரிலீஸ்' ஆகுது. அந்தபடம் தமிழில் 'சென்னைக்கூட்டம்' என்ற பெயரில் திரைக்கு வர உள்ளது. இனி நான் சினிமா நாயகி மட்டும் தான்.* கதை கேட்காம, சம்பளம் வாங்காம கூட நடிக்க விரும்புற ஹீரோ...சிவகார்த்திகேயன். அவர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பண்ற காமெடி, ரொமான்ஸ் எல்லாமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிற மாதிரி இருக்கும்.அப்ப உங்க 'டிரீம்பாய்'... அதுவும் சிவா... சிவகார்த்திகேயன் தான்.* அழகிய ராட்சசியின் ரோல் மாடல்?அனுஷ்கா மாதிரி ராணி வேடங்கள் பண்ணனும். அவங்க பண்ண 'அருந்ததி' மாதிரி நகைகள் போட்டுட்டு நடிச்சா ஒரு கெத்து தான். சூப்பர் ஹீரோயினா இருக்குற 'நயன்தாரா' மாதிரி வித்தியாசமான படங்கள் பண்ணி சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடிக்கனும். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பண்ணனும்.* பிடித்த இயக்குனர்கள்அட்லி இயக்கத்தில் நடிக்கணும். 'ராஜா ராணி' படம் ரொம்ப பிடிச்சது. அப்புறம் ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், பாலா என எல்லா டைரக்டர்கள் இயக்கத்திலும் நடிக்க ஆவல்.* நடிப்பு மட்டும் தானா...சின்ன வயதில் இருந்தே கிளாசிகல் டான்ஸ், மியூசிக் கத்துக்கிட்டேன். ரெண்டுலயும் பட்டையை கிளப்புவேன். வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பாடுவேன்.* தாவணி, மாடர்ன் டிரஸ்... உங்களுக்கு பிடித்தது?தாவணியில் எடுத்த போட்டோ தான் சினிமா சான்ஸ் வாங்கி கொடுத்தது. அதனால தாவணி பிடிக்கும். மாடர்ன் டிரஸ் ஓ.கே தான். எப்படினாலும் காயத்ரி அழகு தான் (அழகே அழகை ஆராதிக்கிறது). தமிழ் சினிமா தான் என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தியது. என்னோட லட்சியமே சினிமாவில் நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பது தான். அழகின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X