இ.பி.எப். வட்டி வரி வாபஸ் - ஜெட்லி : "என்னால் தான் இது நடந்தது " - ராகுல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எப். வட்டி வரி வாபஸ் - ஜெட்லி : "என்னால் தான் இது நடந்தது " - ராகுல்

Added : மார் 08, 2016 | கருத்துகள் (72)
இ.பி.எப்., வட்டி ,வரி, வாபஸ் ; ஜெட்லி , என்னால் தான் இது நடந்தது , ராகுல்

புதுடில்லி: இ.பி.எப். வட்டிக்கு புதிய வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று பார்லி.,யில் அறிவித்தார். இந்த அறிவிப்பு என்னால் தான் நடந்தது என்று காங்., துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப். 29-ம் தேதி பொது பட்ஜெட்டில் , இ.பி.எப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சகம் இதனை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதையடுத்து இன்று நடந்த பார்லி. பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:

இ.பி.எப். வட்டிக்கு வரி விதிப்பிற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், புதிய வரி விதிப்புமுறை ரத்து செய்ப்படுகிறது. 2016-17 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பும் திரும்ப பெறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.


வரி விதிப்பு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது குறித்து காங்.துணை தலைவர் ராகுல் கூறுகையில்; மத்திய அரசின் இந்த முடிவு மாத சம்பளத்தாரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி . இது குறித்து நான் தொடர்ந்து வலியுறுத்தியதால் என்னால் தான் இது நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X