பொது செய்தி

இந்தியா

பெண்கள் தினத்தில், பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம்

Updated : மார் 08, 2016 | Added : மார் 08, 2016 | கருத்துகள் (42)
Advertisement
Women Day, Air India, operate, longest flight, crewed by only women,பெண்கள் தினம், பெண்கள், ஏர் இந்தியா விமானம்

புதுடில்லி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம்(ஞாயிறு) டில்லியிலிருந்து கிளம்பி சான் பிரான்சிஸ்கோ நகர் சென்றடைந்தது. இந்த விமானத்தில், 4 விமானிகளும், பணிப்பெண்கள் உள்ளிட்ட 14 பெண் ஊழியர்களும் உள்ளனர். இந்த விமானம் இன்று(செவ்வாய்) இன்று மீண்டும் டில்லி திரும்புகிறது. நீண்ட தூரம் பெண்கள் மட்டுமே இந்த விமானத்தை இயக்கியுள்ளது பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர் இந்தியாவின் தலைவர் ஹர்பிரீத் டி சிங், சர்வதேச பெண்கள் தினத்தில் நாங்கள் செய்தது வரலாற்று சாதனை. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த துறையில், பெண்களும், அவர்களுக்கு இணையாக சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளோம் எனக்கூறினார்.

சுமார் 17 மணி நேரம் இயக்கப்பட்ட இந்த விமானம், சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது. இந்த விமானத்தில் பணிபுரிந்த அனைவருமே பெண்கள் என சிங் கூறினார். இந்த விமானத்தில், பெண் டெஸ்பாட்சர் உள்ளார். பெண் டாக்டர் உள்ளார். பெண் ரேடியோ ஆப்பரேட்டர் உள்ளார். கேபின் குரோ, பாதுகாப்பு அதிகாரி என பெண்கள் இருந்தனர். அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நானும் இந்த சோதனைக்கு உட்பட்டேன் என்றார். பெண்கள் தினத்தில், பெண்கள் இயக்கும் 22 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Ram - Dammam,சவுதி அரேபியா
10-மார்-201608:40:57 IST Report Abuse
Venkatesh Ram சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு.....அப்போ இன்னும் முழு நம்பிக்கை வரல...தினமும் இயக்கட்டுமே
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
09-மார்-201619:40:28 IST Report Abuse
Mayilkumar நமது கலாச்சாரத்தில் எப்போதுமே பெண்களுக்கு முதலிடம். எல்லா பெண் கடவுளுமே அதிக பலம் கொண்டவர்கள். பெண்களால் மட்டுமே அடுத்த தலைமுறையை ஏற்படுத்தமுடியும், எனவே பெண்ணை போற்றுங்கள். அப்போது தான் ஆண்கள் முழுமை அடைய முடியும்
Rate this:
Share this comment
Cancel
Gnathan - Sidney,ஆஸ்திரேலியா
09-மார்-201617:43:23 IST Report Abuse
Gnathan பாராட்டுகிறேன் v குண சேகரனை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X