அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை'

Added : மார் 09, 2016 | கருத்துகள் (36)
Advertisement
ஜெமினி கணேசன்

சென்னை:''திரையுலகில், என் தந்தை ஜென்டில்மேனாக பார்க்கப்பட்டார்,'' என, பிரபல மருத்துவரும், நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான கமலா செல்வராஜ் கூறினார். சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்று நடந்த மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது:மருத்துவம் படித்த அனைவருக்கும், நோயாளிகளுக்கு என்ன மருந்து தர வேண்டும் என, உடனடியாக தெரிந்து விடுவதில்லை.
துவக்கத்தில் நானும், 120 ரூபாய்க்கு அறை பிடித்து, 'கிளினிக்' துவங்கினாலும், வைத்தியம் பார்க்க தெரியவில்லை. மூத்த டாக்டர்களை கேட்டு தான் சிகிச்சை அளித்தேன். என் தந்தை, சினிமாவில் நடிப்பதை விட்டு, 35 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவமனை கட்ட துவங்கினேன். அதனால், அவரிடம் நிறைய பணம் இல்லை; ஆறு கிரவுண்ட் இடம் மட்டும் கொடுத்தார். வங்கியில் கடன் வாங்கி, மருத்துவமனையை கட்டினேன்.
எனக்கு, அவர் நிறைய செல்வத்தை தரவில்லை; நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தார். திரை உலகில் அவர் ஒரு, 'ஜென்டில்மேன்' என அழைக்கப்பட்டார். அவர் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை. அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில பா.ஜ.,தலைவர் தமிழிசை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
10-மார்-201607:52:35 IST Report Abuse
K.Sugavanam west CIT nagar நந்தி அருகே அவரது காரை 40 வருஷங்களுக்கு முன் பலமுறை பார்த்து இருக்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel
A R J U N - ,இந்தியா
10-மார்-201606:17:52 IST Report Abuse
A R J U N ....... எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை. ..அப்படி போடு அருவாள ..60 வருடங்களுக்குமுன் நடந்த கூத்தை மக்கள் மறந்திருப்பார்கள்..70 வயதை கடந்தவர்கள் சொல்வர்.கதையை
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
10-மார்-201605:41:39 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan மகளிர் தினத்தில் மகளிரை இழிவு படுத்த இது போதும்... ஒரு ஜென்ட்ல்மேன் என்பவர் தானே பெண்கள் தேடி விழுவார்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X