புதுடில்லி : ராஜயசபாவில் நேற்று பேசிய அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என்றார். இதே போன்று மகளிர் தினத்தை முன்னிட்டு லோக்சபாவில் பேசிய அதிமுக பெண் எம்.பி.,க்கள் ஜெயலலிதாவையும், அவரது திட்டங்களையும் பற்றி புகழ்ந்துரைத்தனர்.