அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயகாந்த்,சட்டசபை தேர்தல்,தனித்து போட்டி

மூன்று மாதங்களாக இருந்து வந்த அரசியல் பரபரப்புகளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்தார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக, சென்னையில் நடந்த மகளிர் தின விழா பொதுக் கூட்டத்தில் அறிவித்தார்.

விஜயகாந்த்,சட்டசபை தேர்தல்,தனித்து போட்டி

இவர், கூட்டணிக்கு வருவார் என்பதை மனதில் வைத்து, 'பழம் கனிந்து வருகிறது; விரைவில் பாலில் விழும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சொன்னது மாறிப் போய், பழம் நழுவி கீழேவிழுந்து விட்டது! சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க.,- - பா.ஜ., -மக்கள் நலக் கூட்டணி தரப்பில், தீவிரமாக முயற்சிக்கப்பட்டது.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான,

வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

பா.ஜ., தரப்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மூன்று முறைக்கு மேல் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர்.

தி.மு.க., தரப்பில் நேரடியாக எந்த பேச்சும் நடக்கவில்லை; ரகசிய பேச்சு நடப்பதாகக் கூறப்பட்டது.கடந்த, 9ம் தேதி பேட்டியளித்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'பழம் கனிந்து கொண்டு இருக்கிறது; பாலில் விரைவில் விழும்' என்று, தே.மு.தி.க., கூட்டணி தொடர்பான கருத்தை வெளியிட்டார்.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நடந்த கூட்டணி பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் இன்று முதல்

Advertisement

துவங்கும் என்றும், விஜயகாந்த் அறிவித்துள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, மாநில நிர்வாகிகள், சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரகுமார் அடங்கிய, ஏழு பேர் குழுவையும், விஜயகாந்த் அமைத்துள்ளார்.
''விஜயகாந்த் 'ரேட்' கூட வாங்குகிறாரா,'சீட்' கூட பேசுகிறாரா என்று பலரும்பலவிதமாக பேசினர். நான் தெளிவாகத்தான்இருக்கிறேன். நான் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை,என் கட்சியினர் தான் முடிவுசெய்ய வேண்டும்.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்து தான் போட்டியிடப் போகிறது. நான் 'கிங்' ஆக இருப்பதற்கே தே.மு.தி.க.,வினர் விரும்புகின்றனர்.கூட்டணி தொடர்பாக, நான் யாரிடமும் பேசவில்லை. கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலம் முழுவதும், 234 தொகுதிகளிலும், தே.மு.தி.க., தனித்து போட்டியிட உள்ளது.

விஜயகாந்த்தே.மு.தி.க., தலைவர்-

-நமது சிறப்பு நிருபர் --


Advertisement

வாசகர் கருத்து (284)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Nath - PCMC,இந்தியா
11-மார்-201622:09:55 IST Report Abuse

V Nath2006ல் தனித்து போட்டி என்றார். அவர் தனித்து போட்டியிட்டதால் தி மு க வுக்கு சாதகமானது. ஒட்டு சதவீதம் 8.38 கிடைத்தது.2009 மக்களவை தேர்தலில் தி மு க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அழைத்தார்கள். 8 தொகுதிகளும் மத்தியில் 2 அமைச்சர் பதவியும் வாங்கி தருவதாக திமுக சொல்லியது. அதை மறுத்து 40 ல் போட்டியிட்டார். சுமார் 33 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது.ஒட்டு சதவீதம் 10.33. ஆனால் 40க்கு 0 கிடைத்தது. அந்த 40 பேரில் 33 பேர் கட்சியைவிட்டே போய்விட்டார்கள். 9 பேர் 1 லட்சம் ஓட்டுகள் பெற்றார்கள். அதில் இப்பொழுது இருப்பது 2 பேர். அதில் சுதீஷ் ஒருவர். 2011ல் 29 ல் வெற்றி பெற்று 7.88 சதவீதம் ஒட்டு வாங்கினார்.2014 மக்களவை தேர்தலில் 14க்கு 0. ஒட்டு சதவீதம் 5.14. தனித்து நின்றாலும் கூட்டனியில் சேர்ந்து போட்டியிட்டாலும் வாக்கு வங்கி உயரவில்லை. கரைந்துகொண்டுதான் போகிறது.ஆனால் எங்கிருந்து அழுத்தமோ தனித்து போட்டி என்று சொல்லியிருக்கிறார்.ஆனால் இந்த முடிவில் அவர் கடைசிவரை உறுதியாக இருப்பார் என்று சொல்வதற்கு இல்லை.இன்னும் ஒரு மாதத்திற்குள் காட்சிகள் மாறலாம் கட்சிகளும் மாறலாம்.

Rate this:
V Nath - PCMC,இந்தியா
11-மார்-201621:49:52 IST Report Abuse

V Nathபழம் நழுவவும் இல்லை, கீழே விழவும் இல்லை. அவரே பழத்தை சாப்பிட எண்ணி கையில்தான் வைத்திருக்கிறார்

Rate this:
Krishnan - Chennai,இந்தியா
11-மார்-201621:12:31 IST Report Abuse

Krishnanஇன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தால் தி மு க வினர், தே மு தி க வுடன் கூட்டணி முடிந்து என்று சொல்லி, தொகுதி பங்கீடு முடிந்து என்று சொல்லி, தேமுதிக போட்டியிடும் தொகுதி பட்டியலும் வெளியிட்டு இருப்பார்கள். விஜயகாந்தின் அனுமதி இல்லாமலே. தப்பித்து விட்டார். வாழ்த்துகள்

Rate this:
மேலும் 281 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X