பதிவு செய்த நாள் :
பதிலடி
மல்லையாவை தப்ப விட்டதாக காங்., புகாருக்கு பதிலடி:
ஐ.மு., அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு

புதுடில்லி;கடன் மோசடியில் சிக்கிய விஜய் மல்லையாவை, வெளிநாடு தப்ப அனுமதித்ததாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு, 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான், மல்லையாவுக்கு கடன்கள் வழங்கப்பட்டன' என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

மல்லையாவை தப்ப விட்டதாக காங்., புகாருக்கு பதிலடி: ஐ.மு., அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு

வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக, விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது.
காங்., புகார்:ராஜ்யசபாவில், இப்பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ''கடன் மோசடி தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள், விஜய் மல்லையாவிடம் விசாரித்து வருகின்றன. அப்படி இருக்கும் போது, அவரை ஏன் கைது செய்யவில்லை; அவரது பாஸ்போர்ட்டை ஏன் முடக்கவில்லை. இந்த குற்றச் சதியில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. அரசின் ஆதரவில்லாமல் அவர், வெளிநாடு தப்பிச்

இந்த கடன்கள் மாற்றியமைக்கப்பட்டு, 2010 வரை வங்கி வசதிகள் நீட்டிக்கப்பட்டன. எந்த சூழ்நிலையில், அவருக்கு கடன்கள் வழங்கப்பட்டன என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.கடன்கள் எப்போது, எப்படி வழங்கப்பட்டன என்பதை காங்கிரஸ் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இந்த தேதிகள் உண்மைக் கதையை சொல்லும். செல்ல முடியாது. லலித் மோடியையும் தப்ப விட்டது மத்திய அரசு,'' என, குற்றம் சாட்டினார்.


தப்ப விடமாட்டோம்: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ஒவ்வொரு பைசாவையும் திரும்ப வசூலிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மல்லையாவுக்கு வங்கி வசதிகள் கொடுத்தது, 2004ல் தான். இது, 2008ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2009ல் அவரது கணக்குகள், வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டன. கடனை வசூலிக்கவும், சொத்துக்களை முடக்கவும், வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில், விஜய் மல்லையா வுக்கு எதிராக, 22 வழக்குகள் உள்ளன. சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்க எந்த உத்தரவும் இல்லை. அவர் வெளிநாடு சென்ற பிறகு தான், வங்கிகள் கூட்டமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. லலித் மோடி தப்பிச் சென்றது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., வெளிநடப்பு:லோக்சபாவிலும் இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த, பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, ''மல்லையாவுக்கு, தே.ஜ., கூட்டணி அரசு, ஒரு பைசா கூட கடன் கொடுக்கவில்லை,'' என்றார். இந்த பதிலில் திருப்தி யடையாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி எம்.பி.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லண்டன் பண்ணை வீட்டில்…இந்தியாவை விட்டு, மார்ச், 2ல் வெளியேறிய விஜய் மல்லையா, லண்டனில் தங்கியிருக்கிறார். லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அவர்தங்கியிருப்பதை, உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர். மீடியா குழுவினர் அப்பகுதியில் திரள, பண்ணை வீட்டின் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எம்.பி., பதவி தப்புமா?முன்னதாக, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால், ''விஜய் மல்லையா, ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால், அவர் குறித்த விவகாரத்தை, விதிகள் குழுவுக்கு

Advertisement

அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார். அதை ஆமோதித்த, ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியனும், ''இந்த விவகாரத்தை, விதிகள் குழு ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.விதிகள் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் விவகாரத்தை, அதற்கென உள்ள குழு விசாரிக்கும். இந்த விசாரணையில், குறிப்பிட்ட எம்.பி., விதிகளை மீறியிருந்தது தெரியவந்தால், அவருக்கு கண்டனம் தெரிவிக்கலாம், குறிப்பிட்ட காலம் வரை 'சஸ்பெண்ட்' செய்யலாம்.
குட்ரோச்சியை தப்ப விட்டது யார்?பார்லிமென்டுக்கு வெளியே, நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ''ஏழை ஒருவன், பசிக்காக திருடினால், அவனை பிடித்து அடித்து சிறையில் அடைக்கின்றனர். ஒரு பெரிய தொழிலதிபர், 9,000 கோடியை திருடியவரை, நாட்டை விட்டு வெளியேற இந்த அரசு அனுமதிக்கிறது. இந்த கேள்விக்கு பிரதமர் மோடியோ, அருண் ஜெட்லியோ பதில் கூறவில்லை,'' என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ''போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி நாட்டு தரகர் ஒட்டாவியோ குட்ரோச்சியின் பாஸ்போர்ட்டை முடக்கும்படி, சி.பி.ஐ., முந்தைய காங்கிரஸ் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இருந்தும், காங்கிரஸ் ஆட்சியில் தான், அவர் தப்பியோடினார்,'' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
11-மார்-201620:09:05 IST Report Abuse

g.s,rajanகாங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் தான் . ஜி எஸ்.ராஜன், சென்னை.

Rate this:
இளங்கோ - chennai,இந்தியா
11-மார்-201618:13:38 IST Report Abuse

இளங்கோகாங்கிரஸ்க்கு இதை கேட்க தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் BJP இதை கையாண்ட விதத்தில் நிச்சயம் சந்தேகம் எழ நியாயம் இருக்கிறது. எனவே இதற்கு சரியான பதிலும் விரைந்து கடன் தொகையை மீட்க எடுக்கும் நடவடிக்கையாலும் தான் இந்த ஆட்சியின் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க முடியும்.

Rate this:
ravi - chennai,இந்தியா
11-மார்-201618:10:54 IST Report Abuse

raviஒரு மனுஷன் உண்மையானவனாய் இருந்தால் இவ்வளவு நடக்கிறது - வருகிறேன் என்று சொல்றாரா - வங்கிகளின் நிர்வாக அமைப்பினரை உள்ளே தள்ளினால் அவர் வருகிறார் - இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருப்பதனால் தான் பெரிய பெரிய ஊழல்களை செய்துவிட்டு அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் பதுங்குகிறார்கள் - அவர்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்ற்றப்படவேண்டும் - காங்கிரஸ் ஊழல் கட்சி உலகமறியும் - அவர்களை பற்றி பேசி ஒன்னும் ஆகபோவதில்லை - எல்லோரும் விஞ்ஞான முறைப்படி பதுக்கிவிட்டார்கள் - நம்முடைய சட்டம் வெறும் ஓட்டைகளால் ஆனது - சாமான்யனுக்கு தான் சட்டம் - ஒரு எல்லையை கடந்துவிட்டால் தேசத்தையே விற்கக்கூடிய ஜாம்பவான்கள் உள்ள நாடு இது - வருத்தமாய் இருக்கிறது - படித்த வொவ்வொரு இந்திய பிரஜையும் இதை சீரியஸா ஆராய்ஞ்சி ஒத்துமையாய் இருந்து குற்றவாளிகளை இனம் கண்டு வோட்டு போடாமல் - மரியாதை கொடுக்காமல் சொத்துக்களை பிடுங்கிவிட்டு அவர் போட்டிருக்கிறாரே ஜட்டி அதோடு அனுப்பவேணும் - ஜெய் ஹிந்த்

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X