இஷ்ரத் வழக்கில் ஆவணம் மாயம்! ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்| Dinamalar

இஷ்ரத் வழக்கில் ஆவணம் மாயம்! ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்

Added : மார் 11, 2016 | கருத்துகள் (32)
Advertisement
இஷ்ரத் வழக்கில் ஆவணம் மாயம்! ராஜ்நாத் சிங் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, இஷ்ரத் ஜகான் 'என்கவுன்டர்' வழக்கு தொடர்பான ஆவணம் காணாமல் போனதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இஸ்ரத் ஜகான் என்கவுன்டர் தொடர்பாக, குஜராத் ஐகோர்ட்டில் முந்தைய மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் அரசியல் ரீதியானது' என, முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியிருந்தார். இந்த விவகாரம் நேற்று லோக்சபாவில் எதிரொலித்தது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து பேசியதாவது: பயங்கரவாதத்தை அரசியலாக்க வேண்டாம். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது ஆபத்து. ஆனால், இஸ்ரத் வழக்கில், அப்போது, முதல்வராக இருந்த, நரேந்திர மோடியையும், வேறு சிலரையும், சிக்க வைக்க, பிரமாண பத்திரத்தில் திரித்து கூறப்பட்டது. டேவிட் ஹெட்லியின் வாக்குமூலம் இதனை உறுதி செய்கிறது. இதுதொடர்பாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், உள்துறை அமைச்சகத்தில் இருந்த இரண்டு ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
12-மார்-201611:28:38 IST Report Abuse
P. SIV GOWRI நல்ல வேளை இந்தியா காணாமல் போகலப்பா .
Rate this:
Share this comment
Cancel
Siva - Muscat,ஓமன்
12-மார்-201610:25:13 IST Report Abuse
Siva பிஜேபி ஒன்னும் புடுங்க முடியாது. கருப்பு பணம் என்ன ஆச்சு
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
12-மார்-201600:10:08 IST Report Abuse
மதுரை விருமாண்டி "வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான்" எனும் அடிமைக் கூட்டம் தான் இன்று தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாவூத் கிலானி தான் அவனுடைய உண்மையான பெயர் என்பதும், பெயரை டேவிட் ஹெட்லி என்று 2006 இல் மாற்றிக் கொண்டான் என்பதும், "Name change helped facilitate the surveillance in India" என்று அவனே கூறியதை தெரிந்து வைத்திருந்தால்.. அத்துடன் வேலை செய்ய மூளை இருந்தால் "ஏன், எப்படி, எதற்கு" ஹெட்லி எனும் தீவிரவாத எலி அம்மணமாகப் போகிரது என்று கேட்பார்கள்.. எனக்கு வேண்டாம், உங்களுக்கும் வேண்டாம், இவர்களின் விசாரணையை, கண்டுபிடிப்பை நேரடியாக பார்லிமென்டிலும், பத்திரிக்கையிலும் போட்டு அரசியல் ஆதாரத்தை மட்டும் கறக்கும் இந்த போலி தேசப்பதர்களை, நீதிபதிக்கு போட்டு காட்டச் சொல்லுங்கள்.. ப.ஜ.க எந்த ஒரு ஊழல், பயங்கரவாத விவகாரங்களிலும் முடிவைத் தேடவில்லை, அரசியல் ஆதாயம் மட்டுமே பார்க்கும் என்பது தான் என் குற்றச்சாட்டு. போபோர்ஸில் இருந்தும், இன்றைய மெகா ஊழல் வழக்குகள் வரை, பா.ஜ.க அரசியல் ஆதாயம் மட்டுமே பார்த்திருக்கிறது. தேவையென்றால் ஊழல் செய்தவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலிலும் இறங்கியிருக்கிறது. இல்லை என்று சொல்லச் சொல்லுங்களேன். எல்லா உண்மைகளையும் புதைக்க மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு..
Rate this:
Share this comment
Soundara Rajan - sydney,ஆஸ்திரேலியா
12-மார்-201611:51:07 IST Report Abuse
Soundara Rajanஇந்திரா, சோனியா & கம்பெனி எந்த ஒரு தடயத்தையும் விட்டு வைப்பதில்லை. 60 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் இருந்து செய்த ஊழல்களையும் தில்லுமுல்லுகளையும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பிஜேபி ஒரு புகாரைக் கூட முடிவுக்கு கொண்டு வரவில்லை என்கிறீரே மதுரை விருமாண்டி அவர்களே. கலிபோர்னியா சென்றாலும் தங்கள் மூளையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X