அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு; ஸ்டாலின் உறுதி

Updated : மார் 11, 2016 | Added : மார் 11, 2016 | கருத்துகள் (120)
Advertisement
சிறுபான்மையினர், இட ஒதுக்கீடு, ஸ்டாலின், உறுதி

விழுப்புரம் : 'சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நடந்த, மாநில ஒருங்கிணைப்பு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெ., ஆட்சியில் உள்ள அவலங்கள்; இந்த ஆட்சியால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் கிடைத்துள்ளது உள்ளிட்டவற்றை, நமக்கு நாமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதுதான் 'நமக்கு நாமே' பயணம். இதன் மூலமாக, மக்கள் மனதில் உள்ள மாற்றங்களை கண்டேன்.

1971ம் ஆண்டில், இரண்டாவது முறையாக கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ் பேசும் முஸ்லிம்களை தவிர்த்து, உருது மொழி பேசுபவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆணையை பிறப்பித்தார். சிறுபான்மை நல வாரியம், உருது அகாடமி, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றை தனது ஆட்சியில் தோற்றுவித்தவர் கருணாநிதி. கடந்த 2006ம் ஆண்டு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டைகூட அமல்படுத்த முடியாமல் கிடப்பில் போட்டுள்ளவர்தான் ஜெ.,

நபிகள் நாயகத்தின் வழி நடப்பவரே கருணாநிதி. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரத்து 449 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதோடு, இதற்காக 331 கோடி ரூபாய் நிதியை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இஸ்லாமியர்களுக்கு திட்டங்கள் மட்டுமின்றி, பலவித சலுகைகள் வந்து சேருவது தி.மு.க., ஆட்சியில் மட்டும்தான். ஆட்சி மொழி மாற்றம் கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தபோது, ஆட்சி மொழியாக தமிழ் அமைய வேண்டும் என, குரல் கொடுத்தவர் காயிதேமில்லத். அவர் வழியில் தமிழ் மொழிக்காக போராடி வருபவர் கருணாநிதி.

கருணாநிதி தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சி அமைய உள்ளது. அவர், இஸ்லாமியர்களுக்கு சொல்வதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்வார். நான், கருணாநிதி மகன். பேசிவிட்டு மட்டும் போகமாட்டேன்; ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது அனைத்தையும் செய்வேன். சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றுவோம். அ.தி.மு.க., ஆட்சிக்காலம் முடியும் தருணத்திலும், 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பல நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆயிரம் கொள்ளை, கொலைகள் நடந்துள்ளன. டில்லியில் நடந்த பொருளாதார ஆய்வு கூட்டத்தில், தமிழகம் பொருளாதாரத்தில் கடைசியிலும், ஊழலில் முதலாவது இடத்திலும் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை மாற, தமிழகத்தில் நடக்க உள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சி மாற்றத்தை தி.மு.க., மூலம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி மூலமாக நல்ல மாற்றம் விரைவில் வரும்.

இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GG.RAJA - chennai,இந்தியா
13-மார்-201601:28:58 IST Report Abuse
GG.RAJA தமிழகத்தில் இப்போது பல்வேறு பிரிவினருக்கும் சேர்த்து மொத்தமாக 69% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( MBC) 20%, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தோருக்கு ( SC )( அருந்ததியர்க்கு வழங்கப்படும் 3% உட்கோட்டா உட்பட ) 18%, மற்றும் மலைவாழ் (ST) வகுப்பினருக்கு 1% என மொத்தம் 69% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் 30% இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களிடையேயுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக 3.5% உட்கோட்டா வழங்கப்படுகிறது. இப்போது ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக மத அடிப்படையில் 5% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இட ஒதுக்கீடு என்பது 50%க்கு அதிகமாகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 69%இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு 5% தனி இட ஒதுக்கீடு என்றால் இந்த 69%க்கும் கூடுதலாக அதாவது இட ஒதுக்கீடு 74% ஆகுமா..அல்லது இந்த 69%லேயே முஸ்லீம்களுக்கென்று 5% தனியாக பிரித்துக் கொடுப்பாரா ..? 69% இட ஒதுக்கீட்டிற்கே உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில் அதன் அளவை 74% உயர்த்துவது சாத்தியமில்லை. இந்நிலையில் இந்த 5% என்பது 69%லிருந்தே பிரித்துக் ஒடுக்கப்படும். அப்படியானால், இந்த 5% இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கான கோட்டாவிலிருந்து அளிக்கப்படுமா..மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கோட்டாவிலிருந்து அளிக்கப்படுமா..அல்லது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு கோட்டாவிலிருந்து அளிக்கப்படுமா..? அப்படியானால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படுமா? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களே.. எச்சரிக்கையுடன் இருங்கள்.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் நமக்கு (பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு )அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட வாய்ப்பிருக்கிருக்கிறது.. ஸ்டாலின் இதைத்தான் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
12-மார்-201615:44:52 IST Report Abuse
Mohan Sundarrajarao திருப்பி திருப்பி , இதே தமிழ் உணர்வு, இட ஒதுக்கீடு, இதை தவிர ஏதாவது - பொருளாதாரம், விவசாயம்,நீர் மேலாண்மை, , விஞ்ஞானம், மருத்துவம், நானோ தொழில் நுட்பம் -இதை பற்றி ஏதாவது முன்னேற்றுவது பற்றி ஏதாவது உருப்படியாக பேசியது உண்டா? தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-மார்-201615:31:23 IST Report Abuse
Endrum Indian 18.75% முஸ்லிம்கள் இந்தியாவில் இன்று (1947ல் 2.85%) அவர்கள் எப்படி மைனாரிட்டி ஆக முடியும். 2% 3% என்றால் ஒத்துக்கொள்ள முடியும். அப்போ 50% ஆகும் வரை மைனாரிட்டி தானா? இளைஞர் அணி சீனியர் சிடிசனே கொஞ்சமாவது power of reasoning இருக்கணும் பேச்சிலே இந்த வயசிலே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X