''உண்மையை திரிக்கும் பொய்யர்கள்'': ஜே.என்.யு., பல்கலை பேராசிரியர் சாடல்

Added : மார் 11, 2016 | கருத்துகள் (24)
Share
Advertisement
உண்மை , திரிக்கும், பொய்யர்கள், ஜே.என்.யு., பல்கலை.,  பேராசிரியர், சாடல்,

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'புரட்சிகரமான' பேச்சு என்ற பெயரில் மாணவர் தலைவர் கன்னையா குமார், நாட்டுக்கு எதிராகவும் ராணுவத்திற்கு எதிராகவும் பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது.

பல்கலையிலேயே சில பேராசிரியர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பல்கலையின் மூத்த ஆங்கில துறை பேராசிரியர் மகரந்த் பரஞ்சபே, கன்னையாகுமாருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.


அவரது பேட்டி:


கேள்வி: அதிருப்தி கருத்துகளை சிலர் தயாரித்து தருவதாக கூறுகிறீர்கள். யார் அவர்கள்?


பதில்: சரியான அத்தாட்சி இல்லாமல் யாரையும் குற்றம் சொல்லக் கூடாது. இதை 'சதி வேலை' என நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் 'பிற்போக்குத்தனத்தின் தரகர்கள்' சிலர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.


சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த இவர்கள் விரும்புகின்றனர். இதில் இவர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது.


கே: நவீன தேசியவாதிகளுக்கும் புரட்சிவதிகளுக்கும் போதிய இடைவெளி இருக்கிறதா என கண்டறிய வேண்டும் என கூறுகிறீர்கள். காலப்போக்கில் அந்த இடைவெளி மறைந்துவிட்டது என கருதுகீறீர்களா?


: நிச்சயமாக மறைந்து விட்டது. இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புரட்சிவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள் என்று சொல்ல விரும்புகிறேன். இந்த புரட்சிவாதிகளின் உண்மைத்தன்மையை சந்தேகப்படுகிறேன். எப்படி புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள் என்ற வழிமுறை அவர்களிடம் இல்லை.


கே: பல்கலையில் உள்ள இடதுசாரிகள், தங்கள் கொள்கைகள் பற்றி வேண்டுமென்றே அறியாமையில் இருப்பதாக கருதுகிறீர்களா?


ப: நிச்சயமாக. அவர்களது கொள்கையில் முழுமைத்தன்மை இல்லை. எல்லாவற்றையும் உணர்ச்சிகரமாக்கப் பார்க்கிறார்கள். உண்மையை திரித்துப் பேசுகிறார்கள்.


கே: இங்கு பேசப்படும் விஷயங்கள் பெரும்பாலும் எதிர்ப்பு கருத்துகளாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இதை பல்கலை பேராசிரியர்கள் ஒத்துக்கொள்வா்களா?


ப: பல்கலையில் சிலர் தங்களை, இந்நாட்டை கண்காணிப்பவர்களாக கருதிக்கொள்கின்றனர். எனவே, இங்கு நடப்பவற்றைப் பற்றி வெளியே இருப்பவர்கள் கவலைப்படுகின்றனர். இங்கு மட்டும் தான் தேவையே இல்லாமல் இலர் அதிக எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்கின்றனர்.


கே: காஷ்மீரில் எத்தனை பேர் தனி நாட்டை ஆதரிக்கிறார்கள் என நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். பெரும்பாலான மாணவர்கள் உங்கள் கருத்தை ஆதரிப்பார்கள் என கருதுகிறீர்களா?


ப: அப்படி நான் கருதவில்லை. காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு இங்கு அவ்வளவாக ஆதரவில்லை. சில இடதுசாரிகள் மட்டும் இதை வலியுறுத்துகிறார்கள். காஷ்மீரில் உள்ள மைனாரிட்டி பண்டிட்களை அங்குள்ள மெஜாரிட்டி முஸ்லீம்கள் எப்படி நடத்துகிறார்கள்? இதற்கு எதிராகவெல்லாம் பல்கலையில் யாரும் வாய் திறப்பதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMKY - chennai,இந்தியா
12-மார்-201613:35:41 IST Report Abuse
RAMKY இவர் பேச்சை கேட்டாலே இவர் பிஜேபி சப்போர்ட்டர் என்று தெளிவாக தெரிகிறது. எவனும் யோகியன் இல்லை
Rate this:
Cancel
sardar papparayudu - nasik,இந்தியா
12-மார்-201613:30:45 IST Report Abuse
sardar papparayudu கலை கல்லுரி நு பேர மாத்துங்க அந்த பல்கலைக்கு .
Rate this:
Cancel
parthiban - coimbatore,இந்தியா
12-மார்-201609:54:58 IST Report Abuse
parthiban தமிழகத்தை சேர்ந்த காசியப்ப முனிவரின் பெயரில்தான் காஷ்மீர் வந்தது என்று படித்து உள்ளேன் , தெரிந்தவர்கள் யாராவது சொல்லவும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X